5/10/2011

அமெரிக்கா அடைய முடியாத இலட்சியத்தை ஒஸாமாவின் இயற்கை மரணத்தில் சாதிப்பு

அல் கைதாவின் தலைவர் ஒஸாமா பின்லேடன் இயற்கை மரணமடைந்து வருடங்கள் கடந்துவிட்டதென தெரிவித்த ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்கா ஆடியவை அனைத்தும் நாடகமென விளக்கினார். போரில் அடைய முடியாத இலட்சியத்தை அமெரிக்கா இயற்கை மரணத்தில் அடைந்து கொள்ள எடுத்த பொய்யான நாடகமே ஒஸாமா பின்லேடனை சுட்டுக்கொன்றதாக விடுத்த அறிவித்தல் என்றும் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கடுமையாகச் சாடினார்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நீண்டு செல்லும் பிர யோசமில்லாத போரை அமெரிக்க மக்கள் வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அதிகரித்துச் செல்லும் போர் செலவீனகளால் அமெ ரிக்காவின் பொருளாதாரம் நலிவடைந்து செல்கின்றது. இதனால் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து செல்கின்றது.
இவற்றை மூடிமறைக்கவே இயற்கையாக என்றோ மரணமடைந்த ஒஸமா பின்லேடனை தாங்கள் அண்மையில் சுட்டுக் கொன்றதாக அறிவித்தது அது உண்மையான ஒஸாமா பின்லேடனாக இருந்தால் ஏன் பிரேதத்தைக் காட்டவில்லை. டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படவில்லை.
இவ்வளவு வேகமாக கடலில் அடக்கம் செய்தனர். கடலுக்குள் அடக்கம் செய்தல் இஸ்லாமிய முறையல்ல. அடக்கம் செய்கையில் முஸ்லிம் உலமா கலந்து கொண்டாரா. எந்த ஒரு நாடும் ஒஸமாவை அடக்கம்செய்ய இடம் தர வில்லையென்றால் எந்த நாடுகளிடம் இதற்கான அனுமதி கோரப்பட்டதென்ற விபரங்களை வெளியிடாதது ஏன் என்ற கேள்விகளை ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்தார்.
இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ராஸா கிலானி நேற்று பாராளுமன்றத்தில் ஒஸாமா பின்லேடன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை விளக்க விருந்தார். பாதுகாப்பு அமைச்சர் வெளிநாட்டு அமைச்சர் இராணுவத் தளபதி பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரி ஆகியோருடன் பிரதமர் யூசுப் ராஸா கிலானி விரிவான கலந்துரையாட லொன்றை நேற்று முன்தினம் நடத்தி யிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment