5/12/2011

மக்கள் எளிதில் அணுகக்கூடிய தலைவர் முதலமைச்சர் சந்திரகாந்தன்.

திருமலை நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்தின் 2011ம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் வி.இராஜேந்திரன் தலைமையில் இன்று (11.05.2011) இடம்பெற்றது இந்நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் கே.முருகுப்பிள்ளை அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களுக்கு திருகோணமலை மக்கள் அரசியல் ரீதியில் முழுமையான பங்களிப்பினை வழங்காத போதும் தான் எந்தவொரு பாகுபாடுமின்றி திருமலை மாவட்டத்திற்கும் முன்னுரிமை கொடுத்து சேவையினை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்;டாக இன்று முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இப்பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வினை குறிப்பிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் தொடர்ந்து எமது திருகோணமலைவாழ்  மக்கள் முதலமைச்சர் அவர்களுக்கு முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் அதே போல் நிருவாகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் அனைவரும் பூரண ஒத்துளைப்பினை வழங்கி தொடர்ந்து கிழக்கிற்கான நேர்மையான தலைமைத்துவம் ஒன்றினை தொடர்ந்து பேணுவதற்கு நாம் அனைவரும் திடசங்கர்ப்பம் பூண வேண்டும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment