5/12/2011

தமிழக தேர்தல் முடிவுகள் நாளை

தமிழக சட்டசபை தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணி நாளை 13 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
தமிழக சட்ட சபைத் தேர்தல் கடந்த மாதம் 13 ஆம் திகதி நடைபெற்று முடிந்தது. இதில் அளிக்கப்பட்ட வாக்குகள் ஒரு மாத கால இடைவெளியின் பின்னர் நாளை 13 ஆம் திகதி எண்ணப்படுகிறது.

இதற்காக தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு பொலிஸ், மற்றும் கலகம் அடக்கும் விசேட பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக ஆயுதப் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இது தவிர தமிழ் நாட்டின் எல்லைப் புறங்களில் உள்ள வீதிச் சோதனை சாவடிகளில் கண் காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்ட சபை தேர்தல் தொகு திகள் உள்ளன. இவற்றில் சுமார் 4 கோடியே 59 இலட்சம் மக்கள் வாக்களித் திருப்பார்கள் என எதிர்பார்ப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறுகிறது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் போது தமிழ்நாட்டின் இருபெரும் கூட்டணிக் கட்சிகளான தி. மு. க. மற்றும் அ. தி. மு. க. கூட்டணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன.
இந்தப் பலப் பரீட்சையில் தத்தமது கட்சிகளின் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக தொகுதிகள் பங்கீடு செய்யும் போது தத்தமது பாணியில் வியூகங்களை அமைத்தன.
இந்த வியூக வடிவமைப்பு தேர்தல் வேட்பாளர் தெரிவு என்பவற்றில் கூட்டணிகளுக்குள் பல குத்து வெட்டுகள் அரங்கேறியபோதும், அவற்றை சமாளித்துக் கொண்டன பிரதான கூட்டணிகளின் தலைமைகள்.
இறுதிநேர நிலவரங்களின்படி தி. மு. க. கூட்டணியில் திராவிட முன்னேற்ற கழகம் 121 தொகுதிகளிலும் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் 7 தொகுதிகளிலும் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும் மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1 தொகுதியிலுமாக 234 தொகுதிகளிலும் தமது வேட்பாளர்களை களம் இறக்கியிருந்தது.
அ. தி. மு. க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதிவரையில் ஒரு பெரும் சர்ச்சையாகவே இருந்து வந்தது. கூட்டணி தலைவி ஜெயலலிதா தே. மு. தி. கவுக்கு 41 இடங்களை வழங்கி விஜயகாந்தை தன்வசம் இழுத்த மையையும் தாம் கோரிய தொகுதி களை வழங்கவில்லை என்பதையும் காரணமாக வைத்து வைகோ தலைமையிலான ம. தி. மு. க. வினர் அ. தி. மு. க. வினை விட்டு வெளியேற மனிதநேய கட்சி, புதிய தமிழகம் கட்சி, அகில இந்திய மூவேந்தர் கழகம், இந்திய குடியரசுக் கட்சி, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலை சந்தித்தது அ. தி. மு. க. கூட் டணி.
சூறாவளிப் பிரசாரம், இலவச வர்ண தொலைக்காட்சி, மடி கணனி, இலவச காப்புறுதி, முதியோர் ஓய்வூதியம், தாலிக்கு பொன், மதுபானம், பிரியாணி என நடைபெற்று முடிந்த தமிழக தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவு பற்றி வாக்குப் பதிவுக்கு பின் ஊடகங்களால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பரபரப்பான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மக்கள், ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும், ஆளுங் கட்சிகளுக்கு சிக்கல் ஏற்படும் என்பதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
முடிவுகளில் ஒவ்வொரு கருத்துக் கணிப்பிலும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தாலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் பெரும்பான்மையான மக்கள், ஒரு மாற்றத்தை விரும்பி ஓட்டுப் போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் வாக்காளர்களிடம், முதல்வராக யார் வரவேண்டும் என விரும்புகிaர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு கரு ணாநிதியை காட்டிலும், ஜெயலலி தாவுக்கு 5 சதவீதம் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது என்கிறது ஊடகங் களின் கருத்துக் கணிப்பு.

0 commentaires :

Post a Comment