5/26/2011

அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு ஆரம்பம் _


  இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ள சில நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் அந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

0 commentaires :

Post a Comment