லிபியாவில் முஹம்மர் கடாபியின் ஆட்சி கவிழ்ந்த பின்னர் யாரிடம் ஆட்சியை ஒப்படைப்பது என்பது தொடர்பாக பேசும் பொருட்டு மொஹமட் ஜிப்ரில் நேற்று அமெரிக்கா பயணமானார். கிளர்ச்சியாளர்களின் தலைவரான மொஹமட் ஜிப்ரில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் இது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளிலீடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஒபாமாவை சந்திக்க முன்னர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டொம்டொனியனுடனும் மொஹமட் ஜீப்ரில் கலந்துரையாடவுள்ளார். லிபிய ஜனாதிபதியை ஆட்சியிலிருந்து கவிழ்க்கும் பணிகள் நிறைவடைந்தால் ஆட்சியை தேசிய கெளன்சிலிடம் ஒப்படைப்பது இந்த கெளன்சிலுக்குள்ள அதிகாரங்கள். இதில் அங்கம் வகிக்கவுள்ளோர் தொடர்பான பிரச்சினைகள் பேசப்படவுள்ளன.
விசேடமாக நாட்டின் நிர்வாகத்தை நடத்த பெருமளவு நிதி தேவைப்படுவதால் இதை அமெரிக்கா வழங்குவதே சிறந்தது என மொஹமட் ஜிப்ரில் விளக்கினார். ஆனால் பிரான்ஸ், ஜேர்மன், கட்டார், அமெரிக்கா என்பன இதுவரைக்கும் இந்த தேசிய கெளன்ஸிலில் யார் உள்ளடக்கப்படுவர் என்பதை தெரிவிக்கவில்லை.
தேசிய கெளன்ஸில் என்ன வகையான வெளிநாட்டுக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் லிபிய மக்களுக்கான ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்வதற்கான நடைமுறைகளையும் அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) முக்கியஸ்தர்கள் மொஹமட் ஜிப்ரியிடம் விளக்கவுள்ளனர்.
நேட்டோ படை தலைமையிலான இராணுவ நடவடிக்கை முடிவடையும் தறுவாயில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன. தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 commentaires :
Post a Comment