5/04/2011

மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கிழக்கு முதல்வர் கலந்து கொண்டார்.

 மட்,மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை க,பொ,த சாதாரன தரம் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் கிழக்கு முதல்வர் அவ்விரு மாணவர்களுக்கும் துவிச்சக்கரவண்டி வழங்கி கௌரவித்தார். இந் நிகழவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபை தவிசாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப் பாடசாலையில் முதன் முறையாக க.பொ.த சாதாரன தரத்தில் இவ் இரு மாணவர்கள் சித்தி பெற்றது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment