மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிhவிற்குட்பட்ட எல்லைக் கிராமமான வடமுனை மற்றும் ஊத்துச்சேனை கிராம மக்கள் பலநெடுங்காலமாக போக்குவரத்துப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வந்திருந்தார்கள். இதனை அப் பிரதேச மக்கள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து, உடனடியாக போக்குவரத்திற்காக கென்டர்ரக வாகனம் ஒன்றை கையளித்துள்ளார். இவ்வாகனத்தை கையளிக்கும் நிகழ்வு இன்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் உதயஜீவதாஸ் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் தவராஜா மற்றும் பிரதித்தவிசாளர் புவிமற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment