5/18/2011

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று விசேட கூட்டம் ஒன்றை நடத்தியது. இக் கூட்டத்தில் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களை சந்திப்பதாகவும் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் பேசவுள்ளதாகவும் கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார். அதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு கட்சியின் பேச்சாளர் தலமையில் இடம் பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மற்றும் முக்கியஸ்த்தர்hளின் வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்படுவது மற்றும் முதலமைச்சரின் வாசஸ்த்தலம் சோதனைக்குட்படுத்தியமை தொடர்பில் நாளை ஜனாதிபதியுடன் விரிவாக ஆராயப்படவுள்ளதையும் அவர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment