கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எ.சி. கிருஸ்ணானந்தராஜா அண்மையில் மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் வைத்து எவ்வித முன்னறிவித்தலுமின்றி கொழும்பிலிருந்து வந்த விசேட இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். மேற்படி கைதானது உண்மையில் கண்டிக்கத்தக்கதொன்று என நேற்று இடம் பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் விசேட பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு சபை வெளிநடப்பும் இடம் பெற்றது.
மேலும் கிழக்கு மாகதாண சபை முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சவநேசதுரை சநந்திரகாந்தன் அவர்களது மட்டக்களப்பு வாசஸ்;த்தலத்திற்கு சென்ற இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் அவரது வீடு சோதனை செய்யப்பட்டமை என்பவற்றை குறிப்பிட்டு கிழக்கு மாகாண சபை அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அப்பிரேரணையில் குறிப்பிடபட்பட்டிருந்தது.
எதுவித காரணமுமின்றி கைது கெய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் எ.சி. கிருஸ்ணானந்தராஜா மற்றும் முதலமைச்சரது வாசஸ்த்தலம் சோதனை செய்யப்டபட்டமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் தாம் அனுப்பியுள்ளதாகவும் மாகாண சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாகாண சபை உறுப்பினர்; விடுதலை செய்யப்படாத பட்சத்திலும் முதலமைச்சரது வாசஸ்த்தலம் சோதiனியிட்ட அடையாளம் தெரியாத குழு யார் என்பதனை வெளிப்படையாக தொவித்து அவர்களுக்கு உரிய தண்டணை வழங்கப்படவும் வேண்டும.; அவ்வாறு இடம்பெறாவிட்டால் தாம் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை அமர்வுகளை பகிஸ்கரிக்கப் போவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள். நேற்று சபை இடைநடுவே ஒத்திவைக்கப்;பட்;டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment