5/24/2011

யுத்தத்திற்கு விரயமான கோடிக்கணக்கான டொலர் இன்று அபிவிருத்திக்கு பயன்படுகிறது


வட மாகாணத்தின் அபிவிருத்திற்காக அரசாங்கம் 2011 முதல் 2013 வரையில் 250 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தி ருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முன்னேற்றத் திற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிதி முதலீட்டு திட்டங்கள் பற்றி கொள்கை விளக்கம் ஒன்றை அளித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாற் கப்ரால் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இவ்வாண்டில் மாத்திரம் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் திட்டங் களுக்காக அரசாங்கம் 70 பில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. இதில் 50 பில்லியன் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக் காகவும் 20 பில்லியன் ரூபா வீதி அமைப்பு திட்டங்களுக்காகவும் செலவிடப்படும்.
வடக்கில் ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரை ரெயில் பாதை களை அமைத்து, ரெயில் சேவையை மீண்டும் தென்னிலங்கை யின் மாத்தறையிலிருந்து காங்கேசன்துறை வரை நீடிக்கும் திட்டத்தின் கீழ் அரசாங்கம் 8.9 பில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளது. இதில் 5.3 பில்லியன் ரூபா இவ்வாண்டில் செல விடப்படும்.
இதேவேளையில் கிழக்கின் அபிவிருத்திக்காக ஏற்கனவே 1 இலட் சத்து 16ஆயிரம் மில்லியன் ரூபா பல்வேறு திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. கிழக்கின் அபிவிருத்தி திட்டங்களுக்காக முழுமையாக இவ்வாண்டில் 26,611 மில்லியன் ரூபாவும் முதலீடு செய்யப்படவுள்ளது. இதில் சரியாக 50 வீத முதலீடு கிழக்கின் வீதி அமைப்புக்காக செலவிடப்படும் என்று அஜித் நிவாற் கப்ரால் புள்ளி விபரங்களுடன் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார்.
2009 ஆம் ஆண்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட போது, வட மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 14.1 சதவீதமாக ஏனைய மாகாணங்களின் அளவுக்கு உயர்ந்திருந்தது என்று சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், நாட்டின் மொத்த அபிவிருத்திக்கு வடபகுதி 2009 ல் 3.3 சதவீத பங்களிப்பை வழங்கியது என்று கூறினார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய அபிவிருத்தி திட்டங்களில் வீதி புனரமைத்தல், ரெயில் பாதை களை புனர்நிர்மாணம் செய்தல், ஆஸ்பத்திரிகள் மற்றும் பாலங் களை திருத்தி அமைத்தல், பயங்கரவாத வன்முறையின் போது இவ்விரு மாகாணங்களிலும் மூடப்பட்ட கைத்தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு அர சாங்கம் இப்போது தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வரு கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்விரு மாகாணங்களிலும் இருக்கும் பாரிய நீர்ப்பாசன திட்டங் களை திருத்தி அமைத்து, உடனடியாக அவற்றின் மூலம் பல்லா யிரக்கணக்கான விளைச்சல் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். மின்சார மற்றும் நீர் விநியோக திட்டங் களை இவ்விரு மாகாணங்களில் விஸ்தரித்தல், இப்பிரதேசங்களில் மேலும் கூடுதலான அளவில் தொழிற் பயிற்சி நிலையங்களையும், ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பை அளிக்கக் கூடிய தொழிற்திறனை புகட்டும் தொழில்நுட்பக் கல்லூரிகளையும் ஏற் படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற் கொண்டு வருகிறது.
இவ்விரு மாகாணங்களில் கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல், மீன்பிடித்து துறைமுகங்களை அமைத்தல் மற்றும் இப்பிரதேசங்களில் உல் லாசப் பிரயாணிகளை ஈர்த்தெடுப்பதற்கான நல்ல பல திட்டங் களை நடைமுறைப்படுத்தும் பணிகளையும் அரசாங்கம் மேற் கொண்டுள்ளது.
இறுதியாக, உள்ளூரில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களை கூடிய விரையில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கு தல் போன்ற நற்பணிகளையும் அரசாங்கம் இப்போது நடைமுறைப் படுத்தி வருகிறது.
வடபகுதியில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் பணி மிக விரை வில் முடிவடையும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக் கிறது என்று தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், இன்னும் மீள்குடியேற்றப்படாத நிலையிலுள்ள 18 ஆயிரம் பேர் அவர்களின் சொந்த இருப்பிடங்களில் குடியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.
இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவினர் வட பகுதி யில் இதுவரையில் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பளவிலான காணி களிலிருந்து கண்ணிவெடிகளை முற்றாக அகற்றி சாதனையையும் புரிந்துள்ளார்கள்.
யுத்தத்தின் போது படைபலத்தை பெருக்குவதற்காக அரசாங்கம் செல விட்டு வந்த பலகோடி அமெரிக்க டொலர் விரயம் இப்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணத்தை அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் சகல பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்திற்காக செலவிடும் என்ற நற்செய்தி யையும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment