100 பேர் கொண்ட மாற்று செயற்குழு
சஜித் தலைமையில் உருவாக்கம்
நூறு அங்கத்தவர்களைக் கொண்ட மாற்று செயற்குழு வொன்றை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளதுடன் அதன் தலைமைப் பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த மாற்று செயற்குழுவின் முதலாவது அமர்வு அடுத்த வாரம் இடம்பெறுமென்றும் தெரிய வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த மாற்று செயற் குழுவில் மாகாண சபை உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் புத்திமான்கள் ஆகியோர் இடம்பெறு வதாக மேற்படி செயற் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த மாற்று செயற்குழு ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு, மகளிர் அணி ஆகியவை தொடர்பாக கூடி ஆராய்வதுடன் கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கும் என்று ஆவர் மேலும் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் செயற் குழுவை நியமிக்கும்போது தனக்கு விருப்பமானவர்களுக்கு முன்னுரிமை வழங்கியதையடுத்தே இந்த பிரச்சினை ஏற்பட்டதாக குறிப்பிட்ட அவர் இதனைக் கட்சி பிளவுபடும் அபாயம் இருப்பதாகவும் கூறினார்
0 commentaires :
Post a Comment