ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நேற்று கொழும்பு வந்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், அஸாத் மெளலானா ஆகியோர் முதலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, அமைச்சர் அதாவுத செனவிரட்ன ஆகியோருடன் நீண்ட நேர பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதனை யடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவும் கலந்துகொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிழக்கில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த பூரண அறிக்கையொன்றை தயாரித்து ஒரு வாரத்தினுள் தம்மிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பேச்சாளர் அஸாத் மெளலானா தெரிவித் தார். முதலமைச்சர் சந்திரகாந்த னின் அலுவலகம், வாசஸ்த லம் என்பன திடீர் சோதனைக் குள்ளாகிய விடயம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் இப்பேச்சு வார்த்தையின் போது ஆராயப்பட்டதாகவும் அஸாத் மெளலானா தெரிவித்தார்
0 commentaires :
Post a Comment