5/23/2011

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ஸ்ரீபெரும்புதூரில் தலைவர்கள் அஞ்சலி

 மே 21: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 20 வது நினைவு நாளை முன்னிட்டு சனிக்கிழமை பல தலைவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினை விடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் திகதி, ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிர சாரத்துக்கு வந்த போது மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரது 20வது நினைவு தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, இ.வி.கே.எஸ். இளங் கோவன், பீட்டர் அல்போன்ஸ், ஞான தேசிகன் எம்.பி., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாசோதா, ஞானசேகர், லதா பிரியகுமார், நடிகர் எஸ்.வி. சேகர், ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்புக் குழு உறுப்பினர் முருகானந்தம், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்கரபாணி ரெட்டி யார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனை வரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
ராஜீவ் காந்தி நினைவிட வளாகத்தில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தொடக்கி வைத்தார்.
பின்னர் 100 ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கி அவர் பேசினார்.
அப்போது அவர் கூறியது, “21ம் நூற் றாண்டிற்கு நம்மை எல்லாம் அழைத்துச் செல்ல பாடுபட்டவர் ராஜீவ்காந்தி. அவரின் 20வது நினைவு நாளை அனுஷ்டித்து வருகி றோம். ராஜீவ்காந்தியின் எண்ணத்தை பிரதி பலிக்கும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சோனியா காந்தியின் கரத்தை வலுப் படுத்த தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும்’ என்றார்.
நினைவு நாளை முன்னிட்டு நினைவிட வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற் பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.
மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் எஸ்.எஸ். பிரகாசம் தலைமையிலான காங்கிரஸார் தீவிரவாத எதிர்ப்பு ஜோதி ஏற்றினர்.
டில்லி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜேந்திரபிரசாத் தலைமையிலான தொண்டர்கள் புனித நீர் கொண்டு வந்து ராஜீவ் நினைவிடத்தில் தெளித்தனர்.
ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

0 commentaires :

Post a Comment