5/12/2011

மட்டக்களப்பில் ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய செயலாளர் சுட்டுக்கொலை _



 மட்டக்களப்பு நகரில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்டவர் இராசமாணிக்கம் மதியழகன் என்ற 38 வயது இளைஞராவார்.

லேக் வீதியிலுள்ள தனது வீட்டில் மாலை 2.30 மணியளவில் பகலுணவு அருந்திக்கொண்டிருந்த போது இனந்தெரியாத நபரொருவர் பிஸ்டலால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய செயலாளரும் பிரதியமைச்சர் கருணா அம்மானின் புளியந்தீவு இணைப்பாளர் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை நடாத்திவருகின்றனர். ___

0 commentaires :

Post a Comment