இன்று (10.05.2011) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களினால் கொண்டுவரப்பட்ட விசேட பிரேரணையின் அடிப்படையில் பிரகாரம் மேற்படி முடிவு எடுக்கப்பட்டது.
அதாவது முதலமைச்சரது பிரேரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவிலான மதுபானச்சாலைகள் இயங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவது அவசியம் என்ற காரணத்தின் அடிப்படையில் அவர் தனது பிரேரணையை முன்வைத்தார். இதனை ஆராய்ந்த அபிவிருத்தி குழு உறுபபினர்களால் உடனடியாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
01. மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபான சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
02. சனத்தொகை பரம்பலுக்கு ஏற்றவகையில் மாத்திரம் மதுபானச் சாலைகள் இருக்கலாம் அதனை விடுத்து இருக்கின்ற மேலதிக மதுபானச்சாலைகளின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும். அதாவது இறுதியாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள்தான் இரத்துச் செய்யப்படும் எனவும் முடிவு எட்டப்பட்டது.
0 commentaires :
Post a Comment