5/07/2011

ஏறாவூர் பற்று பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டம்.

2011ம் ஆண்டிற்கான ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சரும், அபிவிருத்திக்குழு கூட்டத்தின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் இன்று (06.05.2011) ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் செங்கலடியில் காலை இடம் பெற்றது. மேற்படி அபிவிருத்திக்குழு கூட்டமானது பிரதேச மட்டங்களில் எழும் பிரச்சனைகளை அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்னிலைப்படுத்தி மக்கள் தலைவர்கள், கிராமிய மட்ட தலைவர்கள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் கூடிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி தீர்மானங்களை எடுப்பதற்கான நேக்கமாக கொண்டமைந்ததே இக் கூட்டத்தின் பிரதான நேக்கமாகும் என அபிவிருத்திக்குழு கூட்டத்தின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது தலமை உரையில் தெரிவித்தார்.
தோடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் மக்களுக்காகவே சேவை செய்யவே அரசியல் தலைவர்களும், அரச அதிகாரிகளும் இருக்கின்றார்கள். எனவே மக்களுக்கான சேவைகள், அவர்களது பிரச்சனைகளை எடுத்துக்காட்டி பொதுவான ஓர் இணக்கப்பாட்டுடன் கூடிய ஓர் தீர்வினை எடுக்கின்ற ஓர் இடமாகவே இவ் அபிவிருத்தி குழுக் கூட்டம் அமையப் பெற்றிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இக் கூட்டத்திற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சனைகௌரி தினேஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், கௌரவ ரி.ஏ.மாசிலாமனி, பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எஸ்.வினோத், முதலமைச்சரின் செயலாளர் எஸ்.அமலநாதன், திணைக்கள தலைவர்கள், கிராம உத்தியோகஸ்த்தர்கள், கிராமிய மட்டதலைவர்கள், சமூகசேவைகள் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

0 commentaires :

Post a Comment