5/03/2011

ஒஸாமா பின்லேடன் கொலை

அமெரிக்கப் படைகள் அதிரடித்
தாக்குதல்;ஒபாமா அறிவிப்பு


அல்கைதா அமைப்பின் நிறுவனரும் அதன் தலைவரு மான ஒஸாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியுடன் அமெரி க்கப் படையினர் கொன்றதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வொஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதி நிலைநாட்ட ப்பட்டு விட்டது. ஒசாமாவின் மர ணம் உறுதி செய்யப்பட்டு விட் டது. உலகெங்கிலு முள்ள அமை தியை விரும்பும் மக்களுக்கு இது சந்தோசமான செய்தி.
இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை என்றார். டி.என்.ஏ. பரிசோதனையின் படி ஒசாமா இறந்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்க படைகள் வசமுள்ள பின்லே டனின் உடல், புகைப்படம் வழி யாக ஊடகங்களில் வெளியிடப் பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பின்லேடன் தொடர்பாக அமெரி க்க உளவுப் படைக்கு ரகசிய தக வல்கள் கிடைத்தன. இதன் மூலம் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள பல நகரங்களுக்கு ரகசியமாக வந்து செல்வது தெரிய வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பின் லேடன் பாகிஸ்தான் தலை நக ரான இஸ்லாமாபாத்தின் புற நகரில் உள்ள ஒரு விடுதியில் வேறு பெயரில் வந்து தங்கி இரு ப்பது அமெரிக்க உளவுப் படையினருக்கு தெரிய வந்தது.
அவர்கள் பின்லேடனை உயிருடன் பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக அந்த விடுதியை சுற்றி உளவுப் படையினரை நிறுத்தினார்கள். இது பின்லேடன் கூட்டாளிகளுக்கு தெரிந்து விட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சண்டை ஓய்ந்ததும் அந்த விடுதிக்குள் அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். பின்லேடனின் உடலை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். தற்போது அவரது உடல் அமெரிக்காவின் பாதுகாப்பு படை வசம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்டதை பின்லேடன் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ.யும் உறுதி செய்துள்ளது. எனினும் இந்த தகவல் குறித்து அல் கொய்தா அமைப்பு இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை.
இந்நிலையில் பின்லேடனின் மரணச் செய்தி வெளியானதும் வெள்ளை மாளிகைக்கு முன்னால் திரண்ட மக்கள் மகிழ்ச்சியை வெளியிட்டனர். அத்துடன் இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்காவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளன.
54 வயதான பின்லேடன் அமெரிக்காவின் தேடுதல் நபர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் மீது 2001 செப்டெம்பர் உட்பட பல்வேறு தாக்குதல்களுக்கு காரண கர்த்தாவாக சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட பின்லேடனின் உடல் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பார்கிரம் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து ஒசாமாவின் உடலை பத்திரிகையாளர்களுக்கு காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

0 commentaires :

Post a Comment