சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வு புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய பாடசாலை மண்டபத்தில் கிழக்குமாகான சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்திசதுக்கத்தில் இருந்து கிழக்குமாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஏ.கிருஸ்னானந்தராஜா தலைமையில் ஆரம்பமான வாகனப் பேரணி புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய பாடசாலை மண்டபத்தினை வந்தடைந்தது. பின்பு மேதின நிகழ்வு கிழக்குமாகான சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேசசபைத்தவிசாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கைலேஸ்வரராஜா ஆலைய பரிபாலன சபைத்தலைவர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இங்கு 12 தொழிலளிகள் கௌரவிக்கப்பட்டதுடன் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு பாடசலை உபகரனங்களும் வழங்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment