5/21/2011

80 ஆண்டுகளுக்குப் பின் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு

,
 ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த, மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. 80 ஆண்டுகளுக்குப் பின், ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகள் ஜூன் மாதம் ஆரம்பமாகும். இதனால் அரசுக்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும்.
நாட்டில் முதல் முறையாக 1931ம் ஆண்டு ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், ஜாதி அடிப்படையில் நடத்தப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், நாட்டின் மக்கள் தொகை 121.02 கோடி என்றும், ஆண்கள் 62.37 கோடி பேர், பெண்கள் 58.65 கோடி பேர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது, ‘ஜாதி மற்றும் மதம் உட்பட ஏழைகளைக் கண்டறியவும்’ ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நகரங்கள் மற்றும் கிராமங்க ளில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோரை கண்டறிய, கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பில், விவரம் கேட்கப்படும்போது, அவர்களின் ஜாதி மற்றும் மதம் குறித்தும் கேட்டறியப் படும்.
இந்த இரண்டு வகையான கணக்கெடுப்பு பணியும் ஜூன் மாதம் ஆரம்பமாகும். இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வரும் அரசுக்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும்.

0 commentaires :

Post a Comment