5/06/2011

நெல்சிப் திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு 4500 மில்லியன் ரூபாய்

உள்ளூராட்சி சேவைகள் அபிவிருத்தி திட்டம்(NELSIP) தொடர்பான விசேட செயலமர்வு திருகோணமலையில் இன்று (05.05.2011)  கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக் கேட்போர் கூடத்தில் அமைச்சின் செயலாளர் கலாநிதி.எஸ் அமலநாதன் தலைமையில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
ஐந்து ஆண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மேற்படி அபிவிருத்தி திட்டமானது இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் எந்தவொரு செயற்றிட்டங்களும் ஆரம்பிக்கப்படாத நிலையில், தற்போது 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகளிலே குறித்தொதுக்கப்பட்ட அனைத்து நிதிகளும் செலவு செய்ப்பட்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டில் 1313 மில்லியன் ரூபாயும் 2012ம் ஆண்டில் 1970மில்லியன் ரூபாயும் 2013ம் ஆண்டில் 1094மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அம்பாரையில் 15உம் திருகோணமலையில் 13உம் மட்டகளப்பில் 12மாக மொத்தமாக கிழக்கு மாகாணத்திலே மூன்று மாவட்டங்களிலும் 40 உள்ளூராட்சி மன்றங்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டிக்கிறது. அதில் அம்பாரை மாவட்டத்திலுள்ள அம்பாரை நகர சபை , தமண பிரதேச சபை ,லாவுக்கல பிரதேச சபை என்பன உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு பதிதாக உருவாக்கப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் இறக்காமம் பிரதேச சபை என்பன இத்திட்டத்தினுள் உள்வாங்கப்படுவதற்கான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செயலாளர் அமலநாதன் குறிப்பிட்டார்.
இவ் விசேட செயலமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உள்ளூராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார், இத்திட்டத்தின் விசேட நிபுணர்களான பிரதம பொறியிலாளர் பாஸ்கரதாஸ் மற்றும்பிரதி பிரதம செயலாளர் நிருவாகம் கருணாகரன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment