5/24/2011

தேசிய படைவீரர் நினைவுதினம்: 27ம் திகதி கொழும்பில் விரிவான ஏற்பாடுகள்; 8000 படைவீரர் பங்கேற்பு


தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு மற்றும் யுத்த வெற்றியின் இரண்டாவது ஆண்டு நிறைவு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் எதிர்வரும் 27ம் திகதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளன.
வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் காலி முகத்திடலிலும் தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.
இதனை முன்னிட்டு கடந்த ஞாயிற்று க்கிழமை ஆரம்பமான வெற்றி அணி வகுப்பின் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும் 25ம் திகதி வரை கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெறவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.
இம்முறை வெற்றி அணி வகுப்பு வைபவத்தில் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உட்பட சுமார் 8,277 பேர் கலந்து கொள்ளவுள்ளதுடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தலைமையில் அணிவகுப்பு பிரதான நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.
அணிவகுப்பின் போது இராணுவத்தின் ஒவ்வொரு படைப் பிரிவுகளையும் பிரதி நிதித்துவப்படுத்தி கவச வாகனங்கள், கனரக வாகனங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ள துடன், விமானப் படை வீரர்களுடன் விமானப் படை பல்வேறு வகை விமா னங்கள் வானில் பறந்து சாகசங்களை காண்பிக்கவுள்ளதுடன் கொழும்பு காலி முகத்திடலில் கடற்பரப்பில் கடற்படை விமானங்களும் சாகசங்களை காண்பிக்க வுள்ளனர். இதேவேளை, இம்மாதம் 19ம் திகதி முதல் அடுத்த மாதம் 18ம் திகதி வரையிலான ஒரு மாத காலத்தை படை வீரர் மாதமாக அறிவித்துள்ளமை விசேட அம்சமாகும்.

0 commentaires :

Post a Comment