இலங்கையின் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒருவர் HIV/ எயிட்ஸ் நோயினால் மரணிக்கிறார்கள். இந்த நோய் பெரும்பாலும் கணவன்மார்கள் மூலமாகவே பெண்களுக்கும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பரவுகின்றன என்று எயிட்ஸ் நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
உலகில் எயிட்ஸ் நோய், சயரோகம், மலேரியா போன்ற நோய்களை எதிர்த்து போராடுவதற்கான ஐக்கிய நாடுகள் செயற்றிட்டத்தின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, எங்கள் நாட்டில் தற்போது மூவாயிரத் திற்கும் அதிகமானோர் எயிட்ஸ் நோயி னால் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
இவர்களின் 1250 பேருக்கு HIV/ எயிட்ஸ் நோய் இருப்பது வைத்தியர் களினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த வருமானத்தை உடையவர்களுக்கும் மத்திய வருமானத்தை உடையவர்களுக்கும் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலான பணத்தை அரசாங்கம் இப்போது செலவிட்டு வருகின்றது.
இலங்கையில் எயிட்ஸ் நோயை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும், பொதுமக்களினதும் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளினதும் அசமந்தப் போக்கினால் இந்நோய் அதிகளவில் பரவி வருகிறது.
இலங்கையிலுள்ள எயிட்ஸ் நோயாளிகளில் 61% ஆனோர் மேல் மாகாணத்திலேயே இருக்கிறார்கள். இதுபற்றி தேசிய தொற்று நோய் / எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் நிமால் எதிரிசிங்க இங்கு இல்லத்தரசிகள் மட்டுமன்றி, விலைமாதர்களுக்கும் இந்நோய் ஆண்களின் மூலம் அதிவேகமாக பரவி வருகின்றது.
தன்னினச் சேர்க்கையின் மூலமும் ஆண்களினால் இந்நோய் சாதாரண பொதுமக்களுக்கு மட்டுமன்றி சிறைக்கைதிகளுக்கும் பரவி வருவதாக வைத்திய அறிக்கைகள் ஊர்ஜிதம் செய்துள்ளன.
இலங்கையின் சுமார் 40,000 பேர் பாலியல் தொழிலில் சட்டவிரோதமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களுடன் மேலும் 40,000 பேர் போதைவஸ்துக்களை பயன்படுத்துவதில் ஈடுபாடு கொண்டுள்ளனர். எயிட்ஸ் நோயை தடுக்க வேண்டுமாயின் அதன் ஆபத்து குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப் பாசறைகளை நடத்த வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள்.
அடுத்த ஐந்தாண்டு காலத்தில் எயிட்ஸ் நோய் தடுப்பு மற்றும் அந்நோயை கண்டுபிடித்து சிகிச்சையளிக்கும் செயற்பாடுகளுக்காக தங்களுக்கு வெளிநாட்டில் இருந்து 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியாக கிடைக்கும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ரவீந்திர அபேசிங்க தெரிவித்துள்ளார்.

0 commentaires :
Post a Comment