இன்று நேற்றல்ல இது ஒரு நூற்றாண்டு கால புறக்கணிப்பு அய்யா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு சிங்கப்பூர் சென்ற விடயம் எனக்குத் தெரியாது. எனக்கு அறிவிக்கவும் இல்லை. மேற் கண்டவாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிங்கப்பூர் விடயம் தொடர்பாக மட்டக்கள ப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு எம். பிக்கள் கூட எனக்குக் கூறவில்லை.
யோகேஸ்வரன் |
என்னைத் திட்ட மிட்டுப் புறக்கணிக்கின்றார்கள். என் செல்வாக்கு அதிகரிப்பை சகிக்க முடியாத எம். பி. ஒருவரே அனைத்துக்கும் காரணம். பொது மக்களுக்கும் இவ்விடயம் நன்கு தெரியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பிக்கள் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என பொதுமக்கள் கேட்கின்றனர். அவர்கள் கேட்பது சரி. ஆனால், நான் அன்றும் சேவை செய்தவன் இன்றும் சேவை செய்கின்றேன். நாளையும் சேவை செய்வேன்.
வெள்ள அனர்த்தத்தின் போது கிராமம் கிராமமாகச் சென்று உலர் உணவுப் பொருட்கள், உடு துணிகள் ஆயிரக் கணக்கானோருக்கு வழங்கினேன். இது ஊடகவியலாளர்களுக்கு நன்கு தெரியும். புதுவருடத்திற்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் பலவற்றிற்கு புத்தாடைகள் வழங்கினேன். பல்கலைக்கழகம் தெரிவான, பெற்றோரை இழந்த மாணவர்களையும் பராமரித்து வருகின்றேன்.
இதுதான் மக்கள் சேவை எனது எம். பி. சம்பளத்தையும் முற்றாக பொது மக்களுக்காகவே பயன்படுத்துகின்றேன் நான் கெளரவப் பிச்சை எடுத்து பொதுமக்களுக்கு சேவை செய்கின்றேன். இது போன்று ஏன் மற்றைய தமிழ் கூட்டமைப்பு எம். பிக்களுக்கு முடியாது.
தங்களை வளப்படுத்த, செல்வாக்கு உள்ளவர்களை நிராகரித்துவிட்டு, தொடர்ந்தும் தாங்கள் எம். பியாக இருக்க சில எம். பிக்கள் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். திட்டமிட்ட சதிதான் சிங்கப்பூர் விடயம் தொடர்பாக எனக்கு அறிவிக்கவில்லை.
அவர்கள் சிங்கப்பூர் செல்லட்டும். பேசட்டும் ஏன் எனக்கு மட்டு. தமிழ் கூட்டமைப்பு எம். பிக்களாவது கூறவில்லை.
0 commentaires :
Post a Comment