எமது நாட்டில் பல வகையான பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் பலதரப்பட்ட இனத்தவர்களாலும், மதத்தவர்களாலும் கொண்டாடப்படுகின்ற வேளையிலும் எமது நாட்டின் தமிழ் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் பண்டிகை என்ற வகையில் சித்திரை புத்தாண்டு மகத்துவம் பெறுகின்றது. அதுமட்டுமன்றி கலாச்சார ரீதியில்உள்ள பாரிய பிணைப்பை இது கோடிட்டு காட்டுகின்றது சித்தரை புத்தாண்டானது இரு சமூகங்களுக்கிடையிலான வரலாற்று ரீதியான உறவுப்பாலத்தின் சான்றாகவும் இவ் இரு ஆரம்ப கால வரலாற்றிலிருந்து இற்றைக்கு வரைக்கும் பண்பாட்டு கலாச்சார மத விடயங்களில் ஒன்றோடு ஒன்று நெருக்கமான உறவை கொண்டிருக்கின்றது என்பது சித்திரை புத்தாண்டானது இரு சமூகங்ளிலும் ஆண்டில் முதல் பண்டிகையாக அமைகின்றது.
வரலாற்று ரீதியாக ஒன்றோடு ஒன்று இணைந்து சமாந்தரமான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டு இரு சமூகத்தவர்களுக்குமு; இப்புத்தாண்டின் மூலம் ஒன்றிணைவது மகிழ்ச்சிக்குரிய விடையமாகும். அதே நேரம் சித்திரை புத்தாண்டானது நாம் உணரவேண்டிய பல பாடங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆதில் கோடிட்டு காட்ட வேண்டியது சமாந்தரமான பாரம்பரிய கலாச்சார பின்னணியினை கொண்ட இரு சமூகத்தவரும் இப்புத்தாண்டின் மூலம் ஒன்றிணைவது போல ஒரு சமூகத்தவரின் அரசியல்அபிலாசைகள் அடிப்படை உரிமைகள், மனித மேம்பாட்டு திட்டங்கள் போன்றவற்றிலும் இரு சமூகங்களும் ஒன்றோடு ஒன்று உடன்பட்டு பரஸ்பர புரிந்துணர்வு நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் என்ற அதி உன்னதமான கோட்பாட்டையும் உணர்த்துகின்றது. ஆனால் துரதிஷ்ட வசமாக கடந்த காலங்களில் இதனை உணராமல் இரு சமூகங்களும் தங்களுக்குள்ளே மோதிக் கொண்டமை வேதனையான விடையமாகும்.
இனி வரும் காலங்களில் இச் சித்திரை புத்தாண்டு எமக்கு உணர்த்தும் பரஸ்பர அன்பு விட்டுக்கொடுப்பு, நம்பிக்கை என்பன தழைத்தோங்க வேண்டுமானால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கான சமூக நீதியும், சம உரிமையும் கிடைக்கும் போது அடுத்து வருகின்ற சித்திரை புத்தாண்டானது அதன் உண்மையான தத்துவத்தினை எமக்கு உணர்த்துவதிலும், உணர்த்தும் ஒரு புதிய ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே இப்புத்தாண்டு நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் அன்பையும், பரஸ்பர நம்பிக்கையும், விட்டுக் கொடுப்பையும் , சகோதர மேன்மையும், விட்டுக்கொடுப்பையும் உணர்த்துகின்ற ஓர் இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துகின்றேன்.

முதலமைச்சர்,
கிழக்கு மாகாணம்.
கிழக்கு மாகாணம்.
0 commentaires :
Post a Comment