ஆபிரிக்க கூட்டமைப்பின் அமைதி திட்டத்தை லிபியாவின் கடாபி அரசு ஒப்புக்கொண்டுள்ளது என தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகொப் சுமா கூறினார்.
லிபியாவில் அமைதி நடவடிக்கையை மேற்கொள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகொப் சுமா மற்றும் அதன் மூன்று ஆபிரிக்கத் தலைவர்கள், லிபிய தலைவர் கடாபியை தலைநகர் திரிபோலியில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது ஆபிரிக்க கூட்டமைப்பு முன்வைத்த சமாதானத் திட்டத்திற்கு கடாபி அரசு சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் ஆபிரிக்க கூட்டமைப்பு குழு கிளர்ச்சிப் படையின் மையப் பகுதியான பெங்காசிக்கு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தச் சென்றுள்ளனர். எனினும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சுமா நாடு திரும்பியுள்ளார். அவருக்குப் பதில் தென்னாபிரிக்க வெளியுறவு அமைச்சர் ஆபிரிக்க கூட்டமைப்புடன் பெங்காசி சென்றுள்ளார்.
இந்நிலையில் லிபிய கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:- லிபிய ஜனாதிபதி கடாபி அல்லது அவரது மகன்களை பொறுப்பில் வைக்கும் எந்த கோரிக்கையையும் எங்களால் ஏற்க முடியாது. எனினும் அமைதித் திட்டம் குறித்து ஆபிரிக்க கூட்டமை ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
இதேவேளை, முஅம்மர் கடாபி விலகுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் அது குறித்து தற்போது எந்த விளக்கமும் அளிக்க முடியாது என ஆபிரிக்க கூட்டமைப்பின் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கான ஆணையாளர் ரம்டான் லமாரா குறிப்பிட்டார்.
இதனிடையே லிபியாவில் உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவருவதே ஆபிரிக்க கூட்டமைப்பின் நோக்கம் என்று தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகொப் சுமா குறிப்பிட்டார். ஆபிரிக்க கூட்டமைப்பைச் சேர்ந்த தென்னாபிரிக்க, மாலி, கொங்கோ, உகண்டா மற்றும் மொரிடானியா நாடுகளின் முக்கியஸ்தர்கள் இந்த தூதுக்குழுவில் உள்ளடக்கப்பட் டுள்ளனர்.
அதேவேளை நேட்டோ கூட்டுப்படையின் தாக்குதல்கள் நேற்று முன்தினமும் தொடர்ந்தன. நேற்று முன்தினத்தில் மாத்தில் கடாபி ஆதரவுப்படையின் 25 பீரங்கிகளை தகர்த்ததாக நேட்டோ குறிப்பிட்டுள்ளது. இதில் அஜிதபியா பகுதியில் 11 பீரங்கிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் மிஸ்ராட்டாவில் 14 பீரங்கிகளைத் தாக்கி அழித்ததாகவும் நேட்டோ குறிப்பிட்டது.

0 commentaires :
Post a Comment