73 வயதான ஃபரூக் அப்துல்லா ஜம்முவின் விக்ரம் செளக் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கலாகேந்திராவுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து காந்தி நகரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் டாக்டர்கள் சில சோதனைகளை நடத்தினர். பின்னர் அவருக்கு உடனடியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
அப்துல்லாவின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஃபரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், காஷ்மீர் முதல்வரும், அவரது மகனுமான ஓமர் அப்துல்லா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
0 commentaires :
Post a Comment