தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச ஆய்வரங்கு நேற்று (19) செவ்வாய் க்கிழமை ஒலுவில் வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் (19, 20, 21) நடைபெறவுள்ள இவ் ஆய்வரங்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ். எம். முகம்மது இஸ்மாயில் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் ஆரம்ப நிகழ்விற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி எம். இஸாக் பிரதம அதிதியாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் பதில் தவிசாளர் றொஹான் ராஜபக்ஷ கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டு ஆய்வரங்கை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
யுத்தத்தின் பின்னரான பொருளாதார அபிவிருத்தி – விஞ்ஞானம், தொழில்நுட்பம், மற்றும் முகாமைத்துவத்தை நோக்கி....’ எனும் கருப்பொருளில் இடம்பெறுகின்ற இவ் அய்வரங்கத்திற்கு 200 இற்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை சமர்ப்பிக்கவுள்ளதுடன், இவ்வரங்கு ஆறு (6) அமர்வுகளாக இடம்பெறுகின்றது.
‘சமூக விஞ்ஞானம், விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்பம், வர்த்தகமும் முகாமைத்துவமும், மொழி, சமய கலாசாரம், இயற்கை வளங்களும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியும்’ ஆகிய தலைப்புக்களில் ஆய்வரங்க அமர்வுகள் நடைபெறுகின்றன.
இவ்வாய்வரங்கில் 200ற்கு மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், பீடாதிபதிகள், உபவேந்தர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் முன்னர் பல்வேறு சர்வதேச ஆய்வரங்குகள் இடம்பெற்றாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் முதலாவது சர்வதேச ஆய்வரங்கு இதுவாகும்.
0 commentaires :
Post a Comment