ஆரம்ப காலத்தில் கல்குடா ரெஸ்ட் கவுஸ் சந்தியை அண்மித்த பகுதியிலே மீனவர்களுக்கான இறங்கு துறை அமையப் பெற்றிருந்தது. அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அப் பிரதேசம் பயன்படுத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று(03.04.2011) கல்குடா பிரதேச மீனவர்களுக்கான விசேட கூட்டம் பிரதேச செயலாளர் கிரிதரன் தலைமையில் இடம் பெற்றது. இக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் எஸ். அமலநாதன், கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment