4/20/2011

பிரபலம்பெற்ற கொலைகாரனும், லஞ்ச ஊழல் மன்னனுமான சம்பந்தன் பான்கீ மூனின் அறிக்கையினை வரவேற்கின்றாராம்


தம்மை ஒரு ஜனநாயகவாதியாக சர்வதேச சமூகத்திற்கும், தமிழ்மக்களுக்கும் வெளிக்காட்ட முற்படும் சம்பந்தனால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் எண்ணிக்கை எத்தனை? அத்துடன் சர்வதேச நாடுகளால் பயங்கரவாதியென பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் சம்பந்தன் கைகோர்த்து பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பயங்கரவாத அமைப்பிற்கு தலைமைதாங்கியதன் பின்னணி என்ன? சம்பந்தன் அவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்று பிரபாகரனுடன் இணைந்து பணியாற்றியபோது படுகொலைசெய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அரச பாதுகாப்பும் படையினரின் எண்ணிக்கை எத்தனை நூறு இவற்றிற்கெல்லாம் முழுமையான பொறுப்பாளியாக சம்பந்தனே பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டமையை பான் கீ மூன் அறிவாரா?
1 2002 யூன் 25 ல் மூதூரில் பிரபாகரனின் ஆயுததாரிகள் முன்னெடுத்த முஸ்லிம் மக்கள் மீதான ஆயுத வன்முறைக்கு அனுசரணை வழங்கியமையை சம்பந்தன் மறுப்பாரா? அன்று கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் எண்ணிக்கை 36 என்பது சம்பந்தன் அறியாத விடயமா?
2 யூன் 27 வாளைச்சேனையில் முஸ்லிம் மக்கள்மீது நடாத்தப்பட் கொலை வெறியாட்டத்திற்கு துணை நின்றவர் சமஇபந்தன் என்பதனை அவா மறுப்பாரா?
3 30.03.2004ல் ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை படுகொலைசெய்துவிட்டு தமது கட்சியின் உறுப்பினரான அரியநேந்திரன் என்னும் கொலைஞனை அங்கு நியமித்தவர் யார்?
இவைபோன்ற சம்பந்தனின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட பல நூறு படுகொலைகளுக்காக சம்பந்தன்மீதும் சம்பந்தனின் அடியாட்கள்மீதும் யுத்தமீறல் குற்றச்சாட்டினை முன்னெடுக்க ஐ.நா முன்வருமா?
கொலைகாரனே, லஞ்ச மன்னனே முழுப்பூசணிக்காயை மூன்று சோற்றினுள் மறைக்க முற்படுகின்றீரா?
கொலைகாரர்களின் தற்போதைய தலைவனே நீர் ஐநா அறிக்கையை வரவேற்பதற்கு உமக்குள்ள தகுதி என்ன? உமது அரசியல் வரலாற்றினை அறியாதவர்களா தமிழ் மக்கள். புலிகள் தொடர்பாக நீர் விமர்சனம் செய்ய மறுப்பதை பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் சொன்னதனை நாங்கள் மறந்துவிடவில்லை. புலிகள் மேற்கொண்ட படுகொலைகளுக்கும் அழிவுகளுக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரான நீரும் உமது சகாக்களுமே காரணம். புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாதணிகளுக்கு தூசி தட்டியதன்மூலம் பாராளுமன்றப் பதவிகளை நீரும் உமது சகாக்களும் பெற்றபோது பிரபாகரனின் படத்தை மார்பில் சுமந்து ஊர்வலம் சென்றதை உம்மால் மறுக்க முடியுமா உம்மைப்போன்றவர்களால். புலிகளின் படுகொலைகளில் ஒன்றினையாயினும் விமர்ச்சிக்க முடிந்ததா?
நீரும் உமது சகாக்களும் புலிகளை உசுப்பேத்தி உசுப்பேத்தி முள்ளிவாய்க்கால் வரை கொண்டு போய் விட்டதில் உமக்கு பெரிய பங்கு உண்டு. என்பதனை மூடி மறைப்பதற்காக இன்று என்ன பேசுகின்றீர். இப்போதேனும் சுயவிமர்சனம் செய்ய உம்மால் ஏன் முடியாது போனது? எங்கே புலிகளின் படுகொலைகளுக்கும் அராஜகங்களுக்கும் எதிராக குரல் கொடுத்த ஒரு பதிவைத்தானும் உம்மால் காட்ட முடியுமா மிஸ்டர் சம்பந்தர்.
யார் தலையில் மிளகாய் அரைக்கப்பார்க்கின்றீர் நீரும் உமது சகாக்களும் புலிகளுக்கு முன்னால் கூழைக்கும்பிடு போட்டு அவர்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி பொம்மைகளாய் ஆடியதை நாங்கள் மறக்கமாட்டோம்? யாருடைய தலையில் பூச்சூட முற்படுகிறீர்? காலம் விரையில் பதில்கூறும் கவலைப்படாதீர்
.நன்றி மகாவலி 

0 commentaires :

Post a Comment