ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் விபரம் வருமாறு:
அறிமுகம்
1. கருத்து வேறுபாடுகளுக்கிடையே துன்பம் மிகுந்த விதத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது. அதன் இரக்கமற்ற தன்மைக்கு பெயர்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 27 வருடங்களுக்குப் பின்னர் ஆயுதமேந்திய மோதல் முடிவுக்கு வந்ததையிட்டு இலங்கையர் பலரும் உலகம் முழுவதில் உள்ள ஏனையவர்களும் மன ஆறுதல் அடைந்தனர். ஆயினும், நாட்டின் ஆயுதப்படையினர் வெற்றியை அடைவதற்காகக் கையாண்ட வழிமுறைகள் பற்றி இலங்கை மற்றும் ஏனைய இடங்களில் உள்ளவர்கள் அதிக மனத்தாக்கம் அடைந்தனர். நாட்டின் வடகிழக்குக் கரையோரப்பகுதியான வன்னியின் ஒரு சிறிய இடத்தில் தப்பியோட முடியாமல் மும்முரமாக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கிடையே பல இலட்சக்கணக்கான தமிழ் பிரஜைகள் சிக்குண்டிருப்பதை அதிகரித்து வரும் அச்சத்துடன் பல மாதங்களாக அவர்கள் நோக்கியவண்ணம் இருந்தனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்த பிரஜைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தது. அரசாங்க தரப்பிலிருந்து எறியப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் சிக்கினர்“ அப்பகுதியில் இருந்து தப்பியோட முயற்சித்த போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலரை எல்ரிரிஈ இனர் சுட்டனர். மனிதாபிமான உதவிக்கான தேவை அதிகரித்த போதிலும், அரசாங்கத்தினால் அது தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டது. அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக யுத்தத்தைப் போதியளவு தளர்த்துவதற்கான முயற்சிகள் தடுமாற்றமடைந்தன.
2. மோதல் வலயத்தில் இருந்து பாரபட்சமற்ற அறிக்கை விடுத்தலுக்குத் தட்டுப்பாடு நிலவியதால், 2009 மே மாதம் 19ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி வெற்றியைப் பிரகடனப்படுத்திய நாள் வரை இறுதி இராணுவத் தாக்குதலின் போத என்ன நேர்ந்தது என்பதை சரியாக நிர்ணயிப்பது சிரமாக இருந்தது. ஆயினும், அரசாங்கம் அப்பிரதேசத்தில் இருந்ததாக முன்னர் கூறிய மதிப்பீட்டை அதிக எண்ணிக்கையால் விஞ்சுமளவிற்கு யுத்த வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 290,000 மக்கள் மூடப்பட்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பாரிய காயங்களுக்கு இலக்காகிய பலர் அடங்கிய சுமார் 14,00 மக்கள் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினால் கடல் மார்க்கமாக பாதுகாப்பான இடத்துக்கு அகற்றப்பட்டனர். எல்லா அறிகுறிகளின்படி, மரணித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததோடு, இன்று கூட சரியான கணிப்பொன்று நிர்ணியக்கப்படவில்லை. எனினும், "பூஜ்ய பொதுமக்கள் சேதத்துடன்' தான் "மனிதாபிமான மீட்டு நடவடிக்கையொன்றினை' மேற்கொண்டதாக அரசாங்கம் உறுதியாக வாதிட்டு வந்துள்ளது.
3. யுத்தம் முடிவுற்று மூன்று நாட்களுக்குப் பின்னரே செயலாளர் நாயகம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதோடு மோதல் வலயத்தின் சில இடங்களையும் மோதல் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான ஒரு முகாமையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டார். அவரின் விஜயத்தின் முடிவில், இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து செயலாளர் நாயாகம் கூட்டு அறிக்கையொன்றை விடுத்தார். இராணுவ நடவடிக்கைகளின் போது நேர்ந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக பொறுப்புக்கூறும் ஒரு செயற்பாட்டின் முக்கியவத்துவத்தை செயலாளர் நாயகம் அதில் வலியுறுத்தினார் என்பதோடு அத்தகைய இன்னல்கள் பற்றிய நடவடிக்கை எடுப்பதற்கு ஜனதிபதி இணக்கம் தெரிவித்தார். நிபுணர்கள் குழுவின் நியமனம் அந்த கூட்டு அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக செயலாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகும்.
4. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான கூட்டு இணக்கப்பாட்டை அமுல் செய்வது பற்றி செயலாளர் நாயகத்துக்கு அறிவுரை வழங்குவது குழுவின் ஆணையாகும். இவ்வறிக்கையில் இக்குழு குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச சட்டங்களின் மீறல்களின் சுபாவம் மற்றும் அவற்றின் நோக்கெல்லை அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் பதில் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது. குறிப்பாக, கற்ற பாடங்கள் மற்றும் மீளிணைக்கப்பாட்டு ஆணைக்குழு சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள் ஆகியவற்றின் பின்னணியில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இலங்கையின் சட்ட அமைப்பு மற்றும் பொறுப்பக் கூறல் தொடர்பான உள்நாட்டு நிறுவனங்களையும் குழு மறுபரிசீலனை செய்கிறது. அதன் செயற்பாடு முழுவதிலும், இலங்கையின் வரலாற்று மற்றும் அரசியல் சூழ்நிலைப் பொருத்தங்களையும் பொறுப்புக் கூறல் பற்றிய இலங்கையின் தற்கால சூழலையும் குழு கவனத்துக்கு எடுத்துக் கொண்டது. இவ்வறிக்கை குழு மேற்கொண்ட செயற்பாட்டின் பிரதிபலானாகவுள்ளதோடு சிபாரிசுகள் தொகுதிகளாக செயலாளர் நாயகத்துக்கான அறிவறுத்தலையும் அது உள்ளடக்குகிறது.
1. ஆணை, தொகுப்பு மற்று வேலைத் திட்டம்.
அ. குழுவினை அமைத்தல்.
5.இலங்கையின் ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களின்போது குற்றஞ் சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் விடயங்கள் பற்றித் தனக்கு அறிவுரை வழங்குவதற்காக 2010 யூன் 22ஆம் திகதி இக்குழுவின் நியனமத்தை செயலாளர் நாயகம் அறிவித்தார். குழுவின் நோக்கெல்லை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டது: செயலாளர் நாயகமும் இலங்கை ஜனாதிபதியும், 2009 மே 23ஆம் திகதி நாட்டுக்கான செயலாளர் நாயகத்தின் விஜயத்தின் முடிவில் விடுத்த கூட்டு அறிக்கையில், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கைகளின் போது நேர்ந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக பொறுப்புக்கூறும் ஒரு செயற்பாட்டின் முக்கியவத்துவத்தை செயலாளர் நாயகம் அதில் வலியுறுத்தினார். அத்தகைய இன்னல்கள் பற்றிய நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். இத்தருணத்தில் மற்றும் இதன் பின்னணியில்:
1. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக சொல்லப்பட்ட உறுதிப்பாட்டினை அமுல் செய்வதற்காக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பதற்கு செயலாளர் நாயகம் தீர்மானித்தார்.
2.குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை பற்றியவற்றைக் கவனத்துக்கெடுத்து, கூட்டு அறிக்கையின் பொறுப்புக் கூறுவதற்கான செயற்பாட்டு பற்றிய உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான தோதான முறைமைகள், ஏற்படைத்தான சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவம் பற்றிய செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவின் குறிக்கோளாகும்.
3.ஏற்ற மற்றும் சம்பந்தப்பட்ட அனுபவத்தைக் கொண்ட மூன்று உறுப்பினர்களை அது கொண்டிருக்கும். குழு அதற்கென்றே தனது செயற்பாட்டு முறைமைகளை ஏற்படுத்திக் கொள்வதோடு OHCHR இன் துணையோடு செயலயகமொன்று அதற்கு உதவி வழங்கும்.
4.அது செயற்பாட்டை ஆரம்பித்து நான்கு மாதங்களுக்குள் குழு அதன் அறிக்கையை செயலாளர் நாயகத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். 5.குழுவுக்கான நிதியளிப்பு செயலாளர் நாயகத்தின் எதிர்பாரான நிகழ்வுகள் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
6.மர்சுக்கி தாருஸ்ஸமான் (இந்தோனேசியா), தலைவர்; ஸ்ரீவன் ரத்னர் (ஐக்கிய அமெரிக்கக் குடியரசு“ மற்றும் யஸ்மின் சூக்கா (தென் ஆபிரிக்கா) ஆகியவர்களை குழுவின் உறுப்பினர்களாக செயலாளர் நாயகம் நியமித்தார்.
ஆ. குழுவின் ஆணை
1.குழுவின் சகலதையும் உள்ளிட்ட பொறுப்பு
7.செயலாளர் நாயகத்துக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான 2009 மே 23ஆம் தேதிய கூட்டு அறிக்கையை சகல குற்றஞ்சாட்டல்கள் பற்றிய உண்மையான சுபாவம் மற்றும் நோக்கெல்லை பற்றி அமுல் படுத்துவதற்காக இலங்கை இதுகாலவரை மேற்கொண்ட மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவின் பணியாகும். இவ்வாறாகக் குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்று இலகுவாகத் தாக்கமுறக் கூடிய குழுக்களுக்கெதிரான தெளிவான மீறல்கள் உள்ளிட்ட சர்வதேச மனிதாபினமா மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறல் பற்றிய முறைமைகள், தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள் மீது குழு பரவலாகக் கவனம் செலுத்தியது. இப்பிரச்சினை தொடர்பான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் தற்கால அணுகுமுறை பற்றி இயன்றவரை முழுமையானதொரு காட்சியைக் கண்டு பிடிக்க அது முயற்சியெடுத்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதெச கடப்பாடுகளை அவை நிறைவு செய்கின்றனவா மற்றும் எவ்வளவு தூரம் அவை சிறந்த சர்வதேச நடைமுறைகளை பிரதிபலிக்கிறது என்பதை நிர்ணயிப்பதற்காக பொறுப்புக் கூறல் தொடர்பாக தோதான அல்லது தோதான நிலைச்சக்தியைக் கொண்ட இலங்கையின் உள்நாட்டுப் பொறித்தொகுதியையும் அது ஆராய்ந்தது. இறுதியாக, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் பொறுப்புக் கூறல் தொடர்பான அரசாங்கத்தின் தற்கால கொள்கைகளையும் குழு கவனத்துக்கெடுத்துக் கொண்டது. கற்ற பாடங்கள் மற்றும் மீளணிக்கப்பாட்டு ஆணைக்குவினை அமைத்தலை இக்கொள்கைகள் உள்ளிட்டது.
8.கடந்த கால மனித உரிமைகள் மற்றும் கௌரவம் ஆகியவற்றின் மீறல்கள் தொடர்பாக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அரசியல், சட்ட மற்றும் நல்லொழுக்கப் பொறுப்புக்களை நிர்ணயிப்பதில் விரிவானதொரு செயற்பாடாக பொறுப்புக்கூறலை குழு நோக்குறிது“ உண்மை, நீதி, மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நக்ஷ்ட ஈடு ஆகியவற்றையும் பொறுப்புக்கூறல் உள்ளடக்குகிறதோடு, மோதலுக்குப் பின்னர் ஒரு நாட்டில் நிலைத்தகவுள்ள சமாதானத்தை அடைவதற்காக பாரியதொரு செயற்பாட்டின் ஒன்றிணைந்த அம்சமாகவுள்ளது.
பின்னர் இந்த அறிக்கையில் பொறுப்கூக்கூறலின் அம்சங்களையும் பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களையும் இக்குழு விளக்குகிறது.
9.சூன்யத்தில் பொறுப்புக்கூறலுக்கான தரங்கள் மற்றும் பொறித்தொகுதிகளை ஆராய முடியாது என்பதோடு, "குற்றம்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை தொடர்பாக' செயலாளர் நாயகத்துக்கு அதன் ஆலோசனையை வழங்க வேண்டும் என்பதை குழுவின் வரையறை நோக்கெல்லை சுட்டிக் காட்டுகிறது. "சுபாவம் மற்றும் நோக்கெல்லை' என்பது குற்றச்சாட்டுக்களின் அளவு மற்றும் சட்ட தகைமைகள் என்பதைக் குறிக்கிறது. குற்றச்சாட்டுக்களின் அளவினை வருணிப்பதற்காக, குழு பல்வேறு மூலங்களின் இருந்து தகவலைப் பெற்று, சட்டத்தின் அடிப்படையில் அவற்றைச் சீர்தூக்கிப்பார்த்து, பொறுப்புக்கூறல் பற்றிய கூட்டு அறிக்கையை செயற்படுத்துவது தொடர்பில் செயலாளர் நாயகத்துக்கு சிறந்த ஆலோசனையை வழங்குவதை இவ்வேற்பாடு தேவைப்படுத்தியது. அது சர்ச்சைக்குள்ளான உண்மைகள் பற்றி நிஜத் தீர்மானங்கைளை எடுக்கவில்லை என்பதால் வழக்கமான ஐக்கிய நாடுகள் சொற்றொடர் குறிக்கும் உண்மையைக் கண்டறியும் நடவடிக்கையை குழு மேற்கொள்ளவில்லை என்பதோடு நாடுகள், நாடற்ற அமைப்புக்கள் அல்லது தனிநபர்களின் சட்டப்படியான பொறுப்பு அல்லது குறைகூறத்தக்க நிலை பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கான முறைசாநர்ந்த புலனாய்வொன்றையும் மேற்கொள்ளவில்லை.
10. குற்றச்சாட்டுக்கள் பற்றிய மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய பல்வேறு முறைமைகள் பற்றிக் குழு மேற்கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில், இலங்கையில் பொறுப்புக்கூறலை தொடர்வதற்கான சிபாரிசுகள் தொகுதியொன்றை செயலாளர் நாயகத்தின் பாவனைக்காக குழு முன் வைத்துள்ளது. குழு அதன் கடமையைச் செய்யும் கால வரையறையின் போது அதற்குக் கிடைத்த தகவல் மற்றும் கிடைத்த இலக்கியங்களின் அடிப்படையில் இவ்வறிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(தொடரும்) _
0 commentaires :
Post a Comment