4/08/2011

லிபியா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துங்கள் ஒபாமாவுக்கு கடாபி கடிதம்

லிபியா மீது போர் தொடுத்திருப்பது நியாயமற்றது எனவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி முஅம்மர் கடாபி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மூன்று பக்கங்களைக் கொண்ட இந்த கடிதத்தில் கடாபி கூறியிருப்பதாவது:-
எங்கள் நாடு வளர்ந்து கொண்டிருக்கும் சிறிய நாடு. இதன் மீது நீங்கள் போர் தொடுத்து இருப்பது நியாய மற்றது எனவே, எங்கள் மீதான போரை உடனே நிறுத்துங்கள் நீங்கள் ஒரு சிறந்த மனிதர்.
நீங்கள் இப்படி ஒரு தவறான செயலில் ஈடுபடக் கூடாது. உங்களுக்கு என்று முக்கிய பொறுப்புகள் உள்ளன. அதில் இருந்து மாறக்கூடாது. நீங்கள் உலக அமைதிக்கு பாடுபடுகிaர்கள். எங்களுடனும் நட்பாக இருங்கள்.
தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைப்பு கொடுங்கள். உங்கள் படைகளின் தாக்குதல்களால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். ஜனநாயக சமுதாயத்தின் மீது விமான தாக்குதலையும், ஏவுகணை தாக்குதல்களையும் நடத்துவது சரியானது அல்ல. எங்களுக்கு எதிரான படையில் அல்கொய்தா தீவிரவாதிகள் இடம்பெற்று இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
உங்களை எனது மகன் போல கருதுகிறேன். நீங்கள் அமெரிக்காவின் பெயரில் எங்கள் நாட்டு விடயத்தில் தலையிட்டு இருக்கிaர்கள். லிபியா விடயத்தை லிபியா மக்களிடமே விட்டு விடுங்கள். ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போதும் எங்கள் மீது தாக்குதல் நடந்தது.
இப்போது மீண்டும் தாக்குகிaர்கள். நாங்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருக்கி றோம். இதை மேலும் தொடர்வது சரி அல்ல. நீங்கள் என்ன செய்தாலும் நான் உங்களை எனது மகனாகவே கருதுகிறேன். அடுத்து வரும் தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

0 commentaires :

Post a Comment