4/02/2011

தமிழகப் பேராசிரியரை ஏமாற்றி நோபெல் பரிசுக்கு முயற்சித்த இலங்கைத் தமிழர்

Shanmugappirabu Nalliah
இந்திய பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் நோர்வேக்கு பல்கலைக்கழகத்தில்
 உரையாற்ற வருவதாகவும் இலங்கைத் தமிழர்களை சந்திக்க விரும்புவதாகவும்
 நோர்வேத் தமிழர் ஒருவரிடம் கேட்ட பொழுது அவர் தனது வேலைப்பழு காரணமாக
 அவரை நோர்வேயில் Drammen இல் வாழும் சண்முகப்பிரபு நல்லய்யா என்பவரிடம் அறி 
 முகப்படுத்தனார். அவர் அவரை தனது வீட்டில் பேராசிரியரை தஙகவைத்தார்.

 அந்நேரம் தான் ஒரு மனிதவுரிமைப்போராளி என்றும்,  இலங்கை  மக்களுக்கு
உதவுபவன், காந்தீயவாதி என்று 6 பக்கத்தில் ஒரு நற்சான்றிதழை தானே எழுதி,
அதை அந்தப் பேராசிரியரிடம் கொடுத்து அவரின் letterpad இல் எழுதத் தர
கேட்டார். பேராசிரியரும்  பலத்த சங்கடத்தின் மத்தியில் அவர் எழுதியிருந்த
 பலதையும் தவிர்த்து ஒருபக்க நற்சான்றிதழை எழுதி அதன் 6 பிரதிகளை
 சண்முகப்பிரபு நல்லையாவிடம் கொடுத்திருக்கிறார். அந் நபர் அச்
 சான்றிதழ்களை பெற்றதற்கான காரணம் அந்த நற்சான்றிதழ்ளால் தனக்கு வேலை
 எடுக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் என்றும், ஏனைய தமிழர்கள் தன்னை
 மதிப்பார்கள் என்றும் பேராசிரியருக்கு அறிவித்திருக்கிறார். நோபல் பரிசு
 பற்றி இவர் பேராசிரியரிடம் குறிப்பிடவே இல்லை.
 
 பேராசிரியர், தன்னை சண்முகப்பிரபு நல்லையா தனது வீட்டில் தங்கவைத்ததை
 கௌரவிக்குமுகமாக அந் நபருக்கு ஒரு பொன்னாடை போர்த்தி கௌரவிக்க முற்பட்ட போது அந்தப் பொன்னாடையை பேராசிரியர் கலந்து சிறப்பித்த ஒரு பொது
 நிகழ்வில்பல தமிழர்களுக்கு மத்தியல் வைத்து தனக்கு அணிவிக்குமாறு கேட்டுக்கொண்டதுமல்லாமல் பேராசிரியர் அந் நிகழ்வில் அதை தவிர்க்க
 முற்பட்ட போது அவர் பேராசிரியரின் கையில் பொன்னாடையை திணித்து பலவந்தமாக
 பிரபல்யம் தேடிக்கொண்டார். அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் இது
 பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
 
 பேராசிரியர் செல்வதற்கு முன் அவரிடம் இருந்த புத்தகங்களையும் அவை
 என்னிடம் இருந்தால் எனக்கு பெருமையாக இருக்கும் என்று வாங்கிக்கொணடாராம்
 சண்முகப்பிரபு நல்லையா. இதை விட பேராசிரியரை சந்தித்ததமிழ்புத்திஜீவிகளை
 குறித்து இப்படியும்  கூறியுள்ளார்  ”இவர்களுடன் கவனமாய் இருங்கள்” ,
 இவர்களால் உங்களுககு நோர்வேயில் பிரச்சனை வரும் அப்போது நான் தான் உங்களை
 காப்பாற்ற வேண்டும் என்று.
 
 சென்றவாரம் நோர்வே நோபல் கமிட்டி பேராசிரியருக்கு எழுதிய ஒரு
 மின்னஞ்சலால் சண்முகப்பிரபு நல்லையாவின் திருகுதாளம் வெளி வந்தது. அந்த
 மின்னஞ்சல் பேராசிரியர், சண்முகப்பிரபு நல்லையவை உலக சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு முன்மொழிந்ததாக இருந்தது. அதிர்ந்து பன பேராசிரியர்
 நோபல் கமிட்டியுடன் தொடர்பு கொண்டு செய்தி உண்மை என அறிந்துகொண்டார்.
 தான் இவரை முன்மொழியவில்லை என்று அவர்களுக்கு அறிவித்தார். அவர்களும்
 திருகுதாளத்தை புரிந்து கொண்டதனால் அந் நபரின் பெயரை நீங்கிவிட்டுதாக
 எழுத்து மூலமாக அவித்துள்ளனர்.
 
 இது சம்பந்தமாக பேராசிரியரின் கேள்விகளுக்கு, தன்னை  ஒரு நோர்வேஜிய
 பாராளுமன்ற உறுப்பினரும்,  இரு நோர்வேஜிய பேராசிரியர்களுமே முன்
 மொழிந்ததாக கூறியுள்ளார்.. பேராசிரியர்அவர்களின் தொடர்பு இலக்கத்தைக்
 கேட்ட போது THIS IS UNREASONABLE DEMAND! I என்று எழுதியிருக்கிறார்
 சண்முகப்பிரபு நல்லையா.
  சாதாரண பேராசிரியர்களால் முன்மொழிய முடியாது. இந்தியாவில் இருந்த வந்த
 பேராசிரியரின் தகுதி போன்ற தகுதிகள் இருந்தால் மட்டுமே முன்மொழிதல் நோபல்
 கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
 
 தனது நண்பர்கள்  தன்னை முன்மொழிந்தார்கள் எனின், ஏன் நோபல்
 கமிட்டிபேராசிரியரின்  மறுப்பைக் கண்டதும் சண்முகப்பிரபு நல்லையாவின்
 பெயரை அகற்ற வேண்டும்?
 
 சண்முகப்பிரபு நல்லையா ஏன் தன்னை முன்மொழிந்தவர்களின் பெயர்களையும்,
 தொடர்பு இலக்கங்களையும் கொடுக்க மறுக்கிறார்?
  இந்திய பத்திரிகையாளர்கள் இவ்விடயமாக தொடர்பு கொண்ட போது ஏன் அவர் பேச மறுக்கிறார்?
 
 நீங்கள் எனது பெயரை நோபல் கமிட்டியடம் கூறி அகற்றிவிட்டீர்களே, பின்பு
 ஏன் இந்தப் பிரச்சனையை  பெரிதுபடுத்துகிறீர்கள்? இதை நாம் எல்லோரும்
 மறந்து நண்பர்களாக இருப்போம் என்று ஏன் கேட்க வேண்டும்?
 
 இப் பிரச்சனை சகல தமிழர்களையும் நோபல் கமிட்டியின் முன் தலைகுனிய
 வைத்திருக்கிறது என்பதால் இதை பகிரங்கப்படுத்திய ஒரு நோர்வே வாழ் தமிழரை
 சண்முகப்பிரபுவின் மனைவியும், மகளும் தொலைபேசியில் ”நாம் போலீசுக்கு
 போவோம்” என்று மிரட்டியிருக்கிறர்ர்கள். அவர்களை தயவு செய்து நீங்கள்
 உடனேயே போலீசுக்கு
 போகவேண்டும்என நான் விரும்புகிறேன் என்று கூறி அந்த நபர் தொலைபேசியை
 துண்டித்தாராம்.  சற்று நேரத்தில் வேறு ஒருவரைத் தொடர்பு கொண்ட
 சண்முகப்பிரபு  ”என் மனைவி கோவக்காறி.. அவ ஏதோ கத்தீட்டா .” அவர
 கோவிக்கவேண்டாம் என்று  சொல்லச் சொன்னாராம். இவ்வாறு செய்ய வேண்டிய
 அவசியம் என்ன?

 இப் பிரச்சனகள்  சம்பந்தமாக பேராசியரும், இன்னும் பலரும்
 சண்முகப்பிரபுவிடம் விளக்கம் கேட்ட போது தமிழ்மக்களின் நலன் கருதி,
 ஒற்றுமை கருதி, சமாதானம் கருதி இப்பிரச்சனையை விடுமாறு கேட்டுள்ளார்.
 அவரின் மின்னஞ்சல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.தேவையேற்படின்
அவை வெளியிடப்படும்.
 
 இந் நபர் சில வருடங்களுக்கு முன் நடாத்திய பத்திரகையின் நிதி நிர்வாக
 சீர்கேடுகள் நோர்வேயின் நாடுதழுவிய பத்திரிகைகளில் வெளிவந்ததும குறிப்பிடத்தக்கது. இது தவிரதற்போதும் அவர் சம்பந்தமான வேறு சில
 விடயங்களும் அவர் வசிக்கும் இடத்து தமிழர்களால முணுமுணுக்கப்டுகின்றன
 என்பது குறிப்பிடத் தக்கது.
 
 பேராசிரியரநோர்வேஜிய பத்திரிகைகளுடன் இன்று தொடர் கொண்டுள்ளார்.
 தமிழகத்து பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் திரு. சண்முகப்பிரபு
 நல்லையவை தொடர்பு கொண்டு பேச முற்பட்டபோது அவர்  இது பற்றி கருத்துக்
 கூற மறுத்துள்ளார்.  

 
நோபல் பரிசு சம்பந்தமாக பேஸ்புக்கில் உலவிய சில துணுக்கு செய்திகளை தொடர்ந்து பேராசிரியர் குமரேசன் அவர்களை எமது இணையத்தளம் சார்பாக தொடர்பு கொண்டு உரையாடியதன் அடிப்படையில் இக்குறிப்புகள் பிரசுரமாகின்றது 

0 commentaires :

Post a Comment