தான் சரணடைய உள்ளதாக வெளியான செய்தியை ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி லோரன்ட் காக்போ மறுத்துள்ளார்.
ஐவரிகோஸ்ட் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவியபோதும் தற்போதைய ஜனாதிபதி காக்போ பதவி விலக மறுத்து வருவதால் போராட்டம் ஏற்பட்டுள்ளது.
லோரன்ட் காக்போ ஆதரவாளர்களுக்கும், ஜனாதிபதி தேர்தலில் அதிகாரபூர்வமாக வெற்றிபெற்ற குவாட்டாரோ ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் நீடித்து வருகிறது.
அலசானே குவாட்டாரோவுக்கு ஆதரவாக ஐ.நா. உள்ளது. இந்நிலையில் அபிஜாவில் உள்ள காக்போவின் ஜனாதிபதி மாளிகையை அண்டிய பகுதிகளை குவாட்டாரோவின் படை சுற்றி வளைத்துள்ளது. எனவே காக்போ சரணடைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் தற்போது பதுங்கு குழியில் இருக்கும் காக்போ தொலைபேசியினூடாக ஊடகங்களுக்கு கூறியதாவது; தான் சரணடையப்போவதில்லை என்றும் எதிரணியுடன் யுத்த நிறுத்தத்தை கொண்டுவர தனது இராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.

0 commentaires :
Post a Comment