4/12/2011

மட்டக்களப்பு முனைக்காடு ஒளிக் கல்லூரியின் விருது வழங்கும் விழா


View munaikkad...JPG in slide show
மட்டக்களப்பு முனைக்காடு ஒளிக் கல்லூரியின் விருது வழங்கும் விழா  திங்கட்கிழமை முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது
இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட பட்டிப்பளைப்பிரதேசத்திலிருந்து கடந்த வருடம் நடைபெற்ற தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
விழாவில் மாணவர்களுக்கு தலா  மூவாயிரம் ரூபா வீதம் வங்கியில் வைப்பிலிடப்பட்டு புத்தகம் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்த விழாவுக்கு ஒளிக்கல்லூரியின் அதிபர் மா.சத்தியநாயகம்  தலைமை தாங்கினார்.
மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன்
  பிரதம அதிதியாகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீநேசன் மற்றும் ஒக்ஸ்பாம் மாவட்ட இணைப்பாளர் எம்.யோகேஸ்வரன்,கல்வி அதிகாரி ந.தயாசீலன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் லெட்சுமிப்பிள்ளை தாந்தியான் மற்றும் முனைப்பு நிறுவனத்தின் மாவட்ட கிளையின் செயலாளர் எம்.லச்சுதன்  தான்தேன்றீஸ்வர்ர் ஆலய தலைவர் பூ.சுவேந்திரராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

0 commentaires :

Post a Comment