4/02/2011

மட்டக்களப்பில் வெள்ள தடுப்பு அணைக்கட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பெரிதும் சேதமடைந்த மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான பாதையில் ஏற்பட்டுள்ள பாரிய சிதைவுகளை திருத்தியமைத்து வாவி நிரம்பி மீண்டும் பிரதான பாதையை சேதப்படுத்திவிடாமல் தடுக்கும் வெள்ளத்தடுப்பு அணை அமைக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் இத்தடுப்பு அணை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
நெடுஞ்சாலைகள் அமைச்சின் அனுசரணையுடன் வீதி அபிவிருத்தி திணைக்களம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் இவ்வெள்ளத்தடுப்பு அணை அமைக்கும் பணிகள் சில மாதங்களுக்குள் நிறைவடையுமென வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment