அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் திருகோணமலை விஜயத்தின் போது கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் சமமின்மை காணப்படுவதையும், இதனை உடன் சமப்படுத்தி சகல மாணவர்களுக்கும் சமகல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துமாறும் கூறினார்.
நாட்டின் சகல மாணவர்களுக்கும் சமகல்வி வாய்ப்பு வழங்க வேண்டும் எனும் ‘மகிந்த சிந்தனை’க்கமைவாக சகல மாணவர்களுக்கும் சமகல்வி வாய்ப்பை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுனர், கௌரவ முதலமைச்சர், கௌரவ கல்வி அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டலுக்கமைவாக இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஏனெனில் கிழக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளி;ல தேவைக்கும் மேலதிகமாக ஆசிரியர்கள் குவிக்கப்பட்டுள்ள அதே வேளை வேறு பல பாடசாலைகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தமது அடிப்படைக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட நிலையில் துன்பப்படுகின்றனர்.
திருகோணமலை, பட்டிருப்பு, கல்முனை, அக்கறைப்பற்று, சம்மாந்துறை, அம்பாறை ஆகிய வலயங்களில் 1131 மேலதிக ஆசிரியர்கள் நேரசுசூசி இன்றி காணப்படுவதுடன் இவர்களுக்காக மாதாந்தம் சுமார் 17 மில்லியன் ரூபாய்கள் சம்பளமாக வழங்கி அரச நிதி வீண் விரயம் செய்யப்படுகின்றது.
இதே வேளை, மூதூர், கந்தளாய், கிண்ணியா, திருகோணமலை வடக்கு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, மகா ஓயா ஆகிய வலயங்களில் 872 ஆசிரியர்களுக்கான தேவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு செல்வாக்குகள் மூலம் பெரும்பாலும் நகர்ப்புற பாடசாலைகளில் மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ள இவ்வாசிரியர்காளல், அப்பாவி கிராமப்புறபாடசாலை மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கிராமப்புற பாடசாலைகளின் வெற்றிடங்களுக்காக நியமிக்கப்படும் பல ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் மருத்துவ காரணஙகளைப் பயன்படுத்தி நகர்ப்புறங்களுக்கு மாற்றம் பெற்றும் சென்று விடுகின்றனர். இதனால் மாகாணத்தின் ஆசிரியர் தேவை வெளிப்படையாக பூர்த்தி செய்யப்பட்டது போன்ற பிரமை ஏற்படுத்தப்பட்டாலும் பல அப்பாவி மாணவர்கள் ஆசிரியர்களின்றி அநாதரவாகக் கைவிடப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக மாகாணம் முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் 2213 ஆசிரியர்கள் பாடரீதியாக மேலதிகமாகவும், 1749 ஆசிரியர்கள் பாடரீதியாக பற்றாக்குறையாகவும் காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் ஒரு சில பாடவகுதிகளைத் தவிர ஏனைய பாடங்களில் மேலதிக ஆசரியர் இருக்கத்தக்கதாக, ஆசியர்கள் தேவை இல்லாத பாடசாலைகளுக்கு மேலதிக ஆசிரியர்காக நியமிக்கப்பட்டு நியமன நோக்கத்துக்கு மாறாக பயன்படுத்தப்படுவதால் ஆசிரியர் தேவையுள்ள மாணவர்கள் கைவிடப்படுவதுடன், மூலம் அவர்களது கல்விக்கான உரிமையும் மறுக்கப்படுகின்றது. இது அடிப்படை உரிமை மீறல் மட்டுமன்றி இவ்வாறான தவறான ஆளனிப் பயன்பாடு மூலம் விரயம் செய்யப்படும் அரச நிதிக் கையாளுகை சட்டரீரியாக குற்றச் செயலாகும்.
எனவே, ஆசிரியர் தேவையினை சமன்செய்ய வேண்டிய பொறுப்பும், அரச நிதி வீண் விரயத்தைத் தவிர்க்கும் கடமையும் மாகாண கல்விப் பணிப்பாளருக்கும், வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் உரியது என்பதை உணர்ந்து ஆசிரியர் சமமின்மையை நீக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக பாடரீதியாக காணப்படும் மேலதிக ஆசிரியர்களை பாடரீதியாக தேவையுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றும் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விடமாற்றத் திட்டம் இரு வகுதிகளைக் கொண்டது.
1. வலய மட்டத்தில் பாடரீதியாக காணப்படும் ஆசிரியர் சமமின்மையை நீக்குதல்
2. வலயங்களுக்கிடையில் பாடரீதியாக காணப்படும் ஆசிரியர் சமமின்மையை நீக்குதல்
2. வலயங்களுக்கிடையில் பாடரீதியாக காணப்படும் ஆசிரியர் சமமின்மையை நீக்குதல்
0 commentaires :
Post a Comment