கடந்த பாரிய வெள்ள அனர்த்தத்தின் போது கடலுக்குள் பல மரங்கள் அடித்துச் செல்லப்பட்டு இருந்தது. தற்போது அது மீனவர்களுக்கு இடையூறாக இருக்கிறது. இதனை இனங்கண்டு அதனை அகற்றுவதற்கான விசேட வேலைத்திட்டத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் வேலைக்கான காசு எனும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பல கடலோரக் கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று(02.04.2011) மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் படிந்திருக்கின்ற மரக்குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சநிதிரகாந்தன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு மட்டக்களப்ப கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் அனுசரணை வழங்கு கின்றது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சு. அருமைநாயம், பிரதேச செயலாளர் திருமதி கே.பத்மராஜா, கடற்றொழில் நீரியல் வள மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜோர்ஜ் மற்றும் மீள் எழுச்சித்திட்ட உதவிப் பணிப்பாளரும் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment