4/30/2011

உலக தொழிலாளர் உரிமைகளை வென்றெடுத்த மேதினம் நாளை




நாளை சர்வதேச தொழி லாளர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே உலகளாவிய ரீதியில் பிரதி வருடமும் வருகின்ற மே முதலாம் நாளை மே தினமாக கொண்டாட சர்வதேச தொழிலாளர் வர்க்கம் ஏகமனதாக முடிவு செய்தது.
இத்தினத்தில் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்வுகள், அணிவகுப்பு ஒன்றுகூடல் என்பன முக்கிய பங்கினை வகிக்கின்றன என்றும் கூறலாம். மே தினத்தை தேசிய விடுமுறை தினமாக அநேகம் நாடுகள் அறிவித்துள்ளன. இலங்கையிலும் மே தினத்தை அரசாங்கம் பொது விடுமுறை தினமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. இதனால் வர்த்தகம், வங்கிச் சேவையாளர் அடங்கலாக அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை தினமாக்கப் பட்டுள்ளது.
அன்றைய தினம் நமது நாட்டிலுள்ள பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி என்பன கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் ஊர்வலங்க ளையும், ஒன்று கூடல்களையும் நிகழ்த்தவுள்ளன. அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டணி என்பனவும் மே தினத்தை கொண்டாடுகின்றன.
மே தினத்தை தேசிய விடுமுறை தினமாக அநேகம் நாடுகள் அறி வித்துள்ளன.
சால்வேனியா, செர்மியா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளில் மே இரண்டாம் திகதியும் தேசிய விடுமுறை தினமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. கரீபிய நாடுகளில் தொழிலாளர் விடுமுறை தினம் மே மாதத்தில் முதல் திங்கட்கிழமையன்று வழங்கப்படுகின்றது. டொமினிக்கா, டொமினிக் குடியரசு, குயீன்ஸ்லாந்து போன்றவற்றில் இந்தக் கொள்கை யையே பின்பற்றுகின்றன.
இனி உலகெங்குமுள்ள பிரதான நாடுகளில் மேதினம் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பதை விரிவாக ஆராய்வோம். அல்பேனியா வில் மே ஒன்று தேசிய விடுமுறை தினமாக தொழிலாளர் இயக்கத்தினை நினைவு கூரும் விதமாகக் கொண் டாமப்படுகிறது. அல்பேனியாவில் பொதுவுடமை நிகழ்வின் போது அகலமான பிரதான வீதிகளில் ஆடம்பரமான அணி வகுப்பை ஏற்பாடு செய்தது. அணிவகுப்பில் செல்வோர் தொழிலாளர் சமூகத்திற்கு அவசியம் தேவைப்படுகின்ற முக் கியமான உரிமைகளைப் பதாகைகளில் அழகுற எழுதி அவற்றை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு செல்வார்கள். இக்கைங்கரியம் அனைத்துக்குமே தொழிற்சங்கங்கள் உறுதுணை புரிகின்றன என்பது நிதர்சனம் ஆகும்.
அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கத்தை கொண்டாடுகையில் அத்தினம் பொதுவிடுமுறையாக பல்வேறு மாநில மற்றும் பிரதேச அரசாங்கங்களிலும் உறுதி செய்யப் படுகின்றது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் பிரதேசம் நியூசவுத்வேல்ஸ் (னிலீw ஷிouth தீalலீs) மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா விக்டோரியா, தாஸ்மானியா ஆகியவற்றிலும் வெகு விமர்சையாக மே தினக் கொண் டாட்டங்கள் நிகழ்கின்றன. அவுஸ்திரே லியாவில் 1856ம் ஆண்டுதான் முதன் முதல் மே தின விடுமுறை வழங் கப்பட்டதாம்.
பாரிய தொழிற்சாலைகள் எங்கு ஆரம்பிக்கப்படுகின்றதோ அங்கு வேலை நிறுத்தங்கள் உருவாகுவது சகஜம். அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர்கள் மூன்று நாள். பொது வேலை நிறுத்தம் மேற்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பிற்பகலில் பேரணி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பேரணி நடைபெறுவதை அறிந்த காவல் துறையினர் அங்குள்ளோரை அமைதியாகக் கலைந்து செல்லுமாறு பலமுறை பணித்தும் தொழிலாளர் கலைய மறுத்தனர். இதனையடுத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக நான்கு தொழிலாளர் பலியா கினார்கள். ஆகவே ஆங்காங்கே வன்செயலும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஏக காலத்தில் கூட்டத்தை நோக்கி இனந்தெரியாத நபரொருவரினால் குண்டொன்று வீசப்பட்டது இதனால் ஒரு பொலிஸ் உட்பட பன்னிரெண்டு தொழிலாளர் இறக்க நேரிட்டது. பின்னர் தொழிற்சங்கப் பேராட்டங்கள் நடைபெற்றன. இதனால் தொழி லாளர்களுக்கு நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் வேலை நேரம் ஆக்கப்பட்டது. அன்றைய தினத் திலிருந்து மே தினத்திற்கு உகந்த கெளரவம் தொழிற்சாலை நிர்வாகத் தினால் வழங்கப்பட்டு மே தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தினார்கள்.
இனி பிரான்ஸ் நாட்டு மே தினம் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படு கின்றது என்பதைச் சற்றுப் பார்ப்போம். அங்கும் மே ஒன்றைத்தான் மே தினக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக் கியுள்ளனர்.
பிரான்ஸ்சில் தொழிலாளர் மாணவர்கள் மே தின லில்லியை பிரெஞ்சு வீதிகளில் விற்கும் அதே வேளை அவர்கள் தொழிற்சங்கங்களின் நலனுக்காக வீடு வீடாகச் சென்று நிதி திரட்டுகின்றனர். ஏனைய மே தின நிகழ்வுகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன.
ஜெர்மனியில் நாசிக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றில் தொழிலாளர் தினம் அதிகாரபூர்வ விடுமுறை தினமாகத் தொடக்கப்பட்டது. இது மக்களிடையே புதிய ஒன்றுமையை வளர்ப்பதாகக் கருதப்படுகிறது. எமது அண்டை நாடான இந்தியாவில் 1927ம் ஆண்டிலிருந்து மே முதலாம் திகதியை மே தினக் கொண்டாட் டங்களுக்கு தெரிவு செய்யப்பட்டது. அத்துடன் அங்கு தொழிலாளர் வாரத்தையும் கடைப்பிடிக்க தொடங்கினார்கள். மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மே தின வாரம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகவும் அறிய முடிகின்றது மகாராஷ்டரா மற்றும் குஜராத் மாநிலங்கள் 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வாரமும் இதனுடன் அமைந்துள்ளது. சிறப்பு அம்சமெனக் கொள்ளலாம்.
1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னர் ஈரான் பேரரசில் தொழிலாளர் தினமானது கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள அதே நாளில் விடுமுறையாக இருந்தது. ஈரான் இஸ்லாமியக் குடியரசில் எழுபத்தொன்பது முதல் இன்றுவரை தொழிலாளர் தினம் விடுமுறை தினமாக இல்லை. ஆனால் அது சமூகத்தில் முக்கியமான பிரிவினரான தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்க மே முதலாம் திகதி அதிகார பூர்வமாக கொண்டாடப்படுகின்றது.
அயர்லாந்தில் தொழிலாளர் தினம் மே தினத்தில் அதாவது மே மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் வருகின்றது இது பொது விடுமுறையாகும்.
இஸ்ரேலில் மே ஒன்று அதிகார பூர்வமாக கொண்டாடப்படுவதில்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் சோசலிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் இளைஞர் இயக்கங்கள் டெல்அவிவில் அணிவகுப்பை ஏற்பாடு செய்து திருப்தியடைகின்றனர்.
இத்தாலியின் மே ஒன்று தேசிய விடுமுறை தினம் ஆகும். வர்த்தக சமூகத்தின் உரிமை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் பரவலாக இடம்பெறுகின்றன. 1990 களில் இருந்து வர்த்தக அமைப்புக்கள் உரோமில் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்துடன் மிகப் பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்றன.
நியூசிலாந்தில் தொழிலாளர் தினம் மே திங்களில் கொண்டாடப்படுவ தில்லை இங்குதான் ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் மட்டும் சேவை யாற்றுவதற்கான அங்கீகாரம் உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு சேவையிலீடுபடும் தொழிலாளர்களுக்கு எட்டு மணித்தியாலம் வேலை நேரமாக மட்டுப்படுத்தப்பட்டது. இங்கும் தொழிலாளர் தினம் பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்பட்டிருந்தும் வெவ்வேறு மாகாணங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் பட்டதினால் கப்பலோட்டிகள் அதிகப்படியான விடுமுறையைப் பெறும் வாய்ப்பு தன்னிச்சையாகவே உருவாகிவிடுகிறன்றது. இதனால் கப்பல் உரிமையாளர்கள் பாடு பெரும் திண்டாட்டம் ஆகிவிட்டது. ஒரு துறைமுகத்தில் ஒரு நாளும் அடுத்த துறைமுகத்தில் மற்றொரு நாளும் தொழிலாளர் தினம் கொண் டாடப்படுவதால் கப்பலோட்டிகள் அதிகப்படியான விடுமுறை எடுக் கின்றனர் என்று கப்பல் உரிமையாளர் அங்கலாய்த்தனர். 1910இல் அரசாங்கம் விடுமுறை தினத்தை ‘திங்கட்கிழமை யாக்கியது’ எனவே அது நாடு முழுவதும் அதேநாளில் அனுசரிக்கும் படியாக இருந்தது. இன்றைய தினத்தில் நியூசிலாந்து மக்களுக்கு மேலதிக விடுமுறை தினமாக்கப் பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் யூனியன் ஆப் ரெரோ டெ மோக் கரட்டிகாடே பிலிப்பினாஸ் சின் கீழ் மே தினம் நடத்தப்பட்டது. ஆயிர க்கணக்கான தொழிலாளர்கள் டொண் டாவில் பிளாசா மொரினோஸிலிருந்து ‘மலகனனங்பேலஸ்’ வரையில் அணிவகுத்துச் சென்று பின்னர் பிலிப்பைன்ஸ் கவர்னர் ஜெனரல் அவர்களிடம் மனுவொன்றைக் கையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து 1908 ஆம் ஆண்டு ஏப்பிரல் எட்டாம் திகதி பிலிப்பைன்ஸ் சட்டமன்றம் மே மாதத்தின் முதல் நாளை தேசிய விடுமுறை தினமாக்கும் சட்டத்தை இயற்றியது. பிலிப்பைன்ஸ் ஒரு பழைய அமெரிக்கப் பிரதேசமாக இருந்ததால் அது லேபர் டே என்று தலைப்பிடப்பட்டு அமெரிக்க ஆங்கிலத்தில் உச்சரிக்கப்பட்டது.
ஒவ்வொரு மே முதலாந் திகதியும் தொழிலாளர் யூனியன்கள் அணிவகுத்து கியூசன்சிட்டி மணிலா எல்லையில் உள்ள மயூஹேரோட்டோண்டா விலிருந்து ப்ளாசா மிராண்டா என்ற முதன்மை வாயிலின் அருகிலுள்ள பாலம் வரையிலும் அணிவகுத்துச் சென்றனர்.
துருக்கியில் 2009 மே ஒன்று தொழிலாளர் மற்றும் ஒருமைப்பாடு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இது ஒரு பொதுவிடுமுறை தினமாகவும் கருதப்படுகின்றது. அமெரிக்காவில் தொழிலாளர் தினம் என்பது அமெரிக்க பெடரல் விடுமுறை தினத்தில் கொண்டாடப்படுகின்றது. இது தனிப்பட்ட முறையில் கோடையின் முடிவாகவும் குறிப்பாக விடுமுறை காலத்தின் முடிவாகவும் பார்க்கப்படுகின்றது. அடுத்த கல்வியாண்டிற்கு பல பாடசாலைகள் தொழிலாளர் தினம் நிறைவடைந்தபின் வரும் வாரத்தில் திறக்கின்றன. கனடாவிலிருந்து தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டபின்னர் வெள்ளை ஆடையை அணிவதில்லை என்ற மரபை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டது.
அது எவ்வாறு இருப்பினும் மே தினத்தை தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளை வென்றெடுத்த பொன்னாளாகக் கொண்டாடி வருகின்றது. ஆகவே மே தினத்தை மதித்து அதற்கு உகந்த கெளரவத்தை அளித்திடல் வேண்டும். இதுவே தொழிற்சங்கவாதிகளின் தலையாய வேண்டுகோளாகும் என்பது வெள்ளிடைமலை.

0 commentaires :

Post a Comment