4/20/2011

குட்டையை குழப்பிய கூட்டமைப்பு

தமிழ்க் கட்சிகளின் தலையீடுகளினால் இந்திய அரசின் வீட்டுத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தான் இந்தியா சென்றபோது இந்திய வீட்டுத் திட்டம் தொடர்பாக கேட்டு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 50 ஆயிரம் வீடுகள் அமைப்பது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முன்னுரிமைப்படுத்தி பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டனர். எனினும், தமிழ்க் கட்சிகள் தலையீடுகளால் இத்திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். 

0 commentaires :

Post a Comment