4/02/2011

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்று வருகின்றது.இன்று(31.03.2011) வாழைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது. வாழைச்சேனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி முன்னெடுப்புகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் மற்றும் அப்பிரதேசம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் என்பன தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இக் கூட்டத்திற்கு வாழைச்சேனை பிரதேச செயலாளர் கிரிதரன், வாழைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் உதயஜீவதாஸ் மற்றும்  திணைக்களத் தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள்,மக்கள் பிரதிநிகளும் கலந்து கொண்டார்கள்.கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவிற்கான பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (31.03.2011) மட்டக்களப்பு மாவட்ட  பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் கிரான் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், அதாவது பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் ‘ஜாதிகசவிய’ கமநெகும திட்டம், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடையின் கீழான கிராம அபிவிருத்தி திட்டம், கிராமங்களை கட்டியெழுப்பும் அபிவிருத்தி திட்டம், சமுர்த்தி அபிவிருத்தி திட்டம், திரிய பியச வீட்டுத்திட்டம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் என்பன தொடர்பாகவும் பேசப்பட்டது. அத்தோடு இப்பிரதேசம் குறித்து கவனம் செலத்தப்படவேண்டிய பிரச்சனைகள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் என்பன தொடர்பாகவும் முதலமைச்சரினது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.


பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

மேற்படி அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு பிரதேச செயலாளர் தவராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், பிரதேசசபை தவிசாளர் உதயஜீவதாஸ், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்திற்கு மட்டக்களப்பை பிரதிநிதிதுவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு கொடுத்திருந்தும் அவர்கள் எவருமே அங்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விசேடமாக தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்மக்களின் உரிமை அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயற்படுகின்றோம் எனக் கூறுபவர்கள்  மக்களது பிரச்சினைகள் அவர்களுக்கான அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடும் பொதுக்கூட்டத்திற்கு சமூகம் தராமை வேதனையளிக்கின்றது. இருந்த போதும் த.தே.கூ.மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸவரன் மாத்திரம் முடியும் தறுவாயில் வந்து மௌன விரதம் அனுஸ்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 commentaires :

Post a Comment