4/28/2011

தருஸ்மன் அறிக்கை; மட்டு மாநகரசபையில் கண்டனத் தீர்மானம்

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கைக் கெதிராக மட்டக்களப்பு மாநகர சபை கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நேற்றுக் காலை மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் கூடிய மாநகர சபை உறுப்பினர்கள் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புளொட், ஈ. பி. ஆர். எல். எப். உறுப்பினர்கள் கண்டனப் பிரேரணை அங்கீகாரத்தின் போது அமர்வில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் சமுகமளித்திருக்கவில்லை. இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரும் பிரதி மேயருமான ஜோர்ஜ் பிள்ளையும் இத்தீர்மான நிறை வேற்றத்தை பகிஷ்கரித்து சபையில் சமுகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சபையில் உள்ள ஒரேயொரு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான என். கே. றம்ழானும் பகிஷ்கரிப்பிலே ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சபையில் உள்ள 19 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாநகர மேயர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment