ஆரையம்பதி காத்தான்குடி எல்லை வீதியின் எல்லைகளை வரையறுக்கும் முகமாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி. மேரி கிறிஸ்ரினா சசிதரனின் முயற்சியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் நிதி மூலம் ஆரம்பிக்கப்பட்ட எல்லை வளைவு எரிபொருள் நிலைய உரிமையாளரினால் நீதிமன்ற தடை உத்தரவு எடுக்கப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆரையம்பதி ஆலயங்கள், பொது ஸ்தாபனங்கள், வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட அனைவரும் இவ் எல்லை வளைவு அமைக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் ஆணித்தரமாகச் செயற்பட்டதன் விளைவாலும் பிரதேச சபையில் நீதிமன்ற பிரசன்னத்தினால் ஆறு மாத காலத்தின் பின்பு 25.03.2011ஆம் திகதி தொடர்ந்தும் வேலைகளை ஆரம்பிப்பதற்கான இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய மீண்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகளின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய மிகவும் துரிதகதியில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.
0 commentaires :
Post a Comment