நிபுணர் குழுவின் இந்த அறிக்கை குறித்து அண்டைநாடான இந்தியா ஆழமாக சிந்தித்து அவதானம் செலுத்தி மந்தகதியில் செயற்படுகின்றது என்பது தவறானதாகும். இந்தியா புத்திசாதூரியமாகவே செயற்படுகின்றது. அதேபோலவே நிபுணர் குழுவின் அறிக்கையானது இலங்கையில் தமிழ்சிங்கள மக்களுக்கிடையேயான உறவிற்கும் ஐக்கியத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தினையிட்டு புதுமையடைவதற்கு ஒன்றுமில்லை, கூட்டமைப்பு புலிகளின் பிரதிநிதிகளாவே அன்றிருந்து செயற்பட்டு வருகின்றது. அறிக்கையை கூட்டமைப்பு வரவேற்றுள்ளமையை அரசாங்கம் கண்டிக்கின்றது அதேபோல புலிகளின் பிரதிநிதிகளாக செயற்படுவதிலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீட்சிபெறவேண்டும்.தமிழ் கூட்டமைப்பினரே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனும் தொனிப்பொருளில் சென்றுக்கொண்டிருக்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என்ற தொனிப்பொருள் கடந்தகாலங்களில் பொய்த்து விட்டது. அது இன்றும் புலனாகிகொண்டிருக்கின்றது எனினும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி நாங்கள் தான் என்ற அந்த நிலைப்பாட்டில் நின்று நிலைப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. நீங்கள் கூறுவதை போல இந்தியா இந்த விடயத்தில் மந்தமாக செயற்படுவதாக அர்த்தமில்லை மறுபுறத்தில் அவதானமாக சிந்தித்து புத்திசாதூரியமாக செயற்படுவதாக அர்த்தப்படும். இந்த அறிக்கையினை பாராதீய ஜனத்தா கட்சி வரவேற்றிருந்தாலும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையானது தமிழ் சிங்கள மக்களின் ஐக்கியத்திற்கு இடையூறு விளைவிக்கும் என்று கூறியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். அறிக்கை தொடர்பில் இவ்வாறான கருத்துக்கள் வெளியாகுவதே ஜனநாயகத்தின் இலக்கணமாகும். இந்த விடயத்தில் அரசாங்கம் எதனையும் மூடிமறைக்கவில்லை மறைப்பதற்கும் முயற்சிக்கவில்லை இது இறைமையுள்ள நாட்டிற்கு முக்கியமான விடயமாகும் என்பதுடன் அரசாங்கம் பொறுப்புகூறுவதற்கு கடமைப்பட்டுள்ளது என்பதனால் மேற்படி விவகாரங்களை தீவிரமாக கணக்கில் எடுத்தே செயற்படுகின்றது என்றார். ___ | |
|
4/30/2011
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment