4/21/2011

ஐ. நா. ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர நல்லிணக்க செயற்பாட்டை குழப்பக் கூடாது ரஷ்யத் தூதுவர் தெரிவிப்பு


நீண்ட கால மோதலினால் ஏற்பட்ட காயங்களை இலங்கை தேற்றி வரும் இச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது தேவையேற்படின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டு மேயொழிய இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கச் செயற்பாடுகளை குழப்பாமலிருப்பதே சிறந்ததென தாங்கள் நம்புவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலடிமிர் பி. மிக்கைலொவ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த வாரம் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டு ள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்ப தாவது :-
நிபுணர்கள் குழு சமர்ப்பித்திருக்கும் இவ்வறிக்கையை ஐ. நா. அறிக்கையென கூற முடியாது. இதனை ஐ. நா.வின் எந்தவொரு அமைப்பினரோ அல்லது அதன் வேண்டுகோளுக்கு இணங்கவோ தயாரிக்கப்பட்டதல்ல. இது ஐ. நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் தயாரிக்கப்பட்டதொன்றாகும்.
நிபுணர் குழு தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு கடந்த வருடம் ஜூன் 24 இல் ஊடக அறிக்கையொன்றி னூடாக வெளியிட்டிருந்தது
ஐ. நா. தகவல்களை கொண்டு பார்க்கையில் இந்த நிபுணர் குழுவானது மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து ஆராய்ந்து அதன் செயலாளர் நாயத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட தேயொழிய அவை எவ்வாறு இடம்பெற்றன என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கல்ல.
இருப்பினும் தலைமைப் பதவி வகிப்பவர் எனும் வகையில் ஐ. நா. செயலாளர் நாயகம், இவ்விவகாரம் குறித்து பாதுகாப்புச் சபையிடமோ அல்லது பொதுச் சபையிடமோ கருத்து கேட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. அதனைத் தவிர இத்தீர்மானமானது இறைமையுடைய நாட்டினதும் இலங்கைக்கான ஐ. நா. தூதுவரினதும் நிலைப்பாட்டினையும் மீறி எடுக்கப்பட்டதாம்.
இதேவேளை நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவானது துரதிஷ்டவசமாக தனது எல்லைகளை மீறி செயற்பட்டுள்ளது. இதனை நியூயோர்க்கிலுள்ள எமது ஐ. நா. பிரதிநிதியும் உறுதிப்படுத்தியு ள்ளாரெனவும் அவர் கூறியுள்ளார்.

0 commentaires :

Post a Comment