4/19/2011

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றவை : பேராசிரியர் திஸ்ஸ விதாரண _

  இலங்கை தொடர்பாக ஐ. நா. நிபுணர் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையானது எவ்வித ஆதாரங்களையும் தகவல்களையும் உள்ளடக்கியதல்ல என விஞ்ஞான விவகாரத்துறை சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறைமையை மீறும் வகையில் ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் குழுவை நியமித்துள்ளதோடு விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வழங்கிய போலியான தகவல்களைக் கொண்டு அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிறுத்தும் நோக்குடனேயே இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment