: இந்தியா - கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையே, அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மன்மோகன் சிங், கஜகஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு அதிபர் நுர்சுல்தான் நஜர்பயேவுடன், இருதரப்பு உறவு குறி த்து பேச்சு நடத்தினார். இதில், இரு நாடுகளுக்கும் இடையேயான, அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விஷயமும் முக்கிய இடம் பெற்றது. இதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே, அணுசக்தி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் காரணமாக, அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சி, தொழில் நுட்ப வசதி, யுரேனிய பயன்பாடு குறித்த தகவல்கள் ஆகியவற்றை இரு நாடுகளும், பரிமாறிக் கொள்ள முடியும். உலகிலேயே, அணுசக்தி எரிபொருளை அதிகமாக இருப்பு வைத்திருக்க கூடிய நாடுகளில், கஜகஸ்தானுக்கு முக்கிய இடம் உண்டு. இந்தியா, தனது அணுசக்தி தயாரிப்பின் அளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது கஜகஸ்தானுடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், அதற் கு பெரிய அளவில் உதவும். கடந்த 2008ல், கஜகஸ்தான் அதிபர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோதும், இரு நாடுகளுக்கும் இடையே, ஒரு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு தேவையான யுரேனியத்தை, கஜகஸ்தான் சப்ளை செய்து வருகிறது. தற்போது, அணுசக்தி ஒப்பந்தம் தவிர, சட்ட ஆலோசனைகள் தொடர்பான ஒப்பந்தமும், இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.
0 commentaires :
Post a Comment