4/15/2011

திருமதி ஜோசப் பரராஜசிங்கத்தை கனடாவில் இருந்து நாடுகடத்த உத்தரவு _


கனடாவில் வசித்துவரும் த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின், மனைவியை நாடுகடத்துமாறு கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை உத்தவிட்டுள்ளது.

அந்நாட்டில் தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் முன்னாள் அங்கத்தவர் என அவர் இணங்காணப்பட்டமையினாலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் திருமதி ஜோசப் பரராஜசிங்கத்தின் நாடுகடத்தல் உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

திருமதி சுகுணம் பரராஜசிங்கம் (74 ) கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கனடாவில் வசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

0 commentaires :

Post a Comment