போரதீவுப் பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட மண்டூர் சங்கபுரத்தில் புதிய பொது நூலகம் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிறிதரன் தலைமயில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அப் பிரதேச பொது அமைப்புக்கள், தங்களது எல்லைக் கிராமத்திலே என்றுமே இல்லாத அளவிற்கு இன்று தானே முன்வந்து ஒரு நூலகக் கட்டிடத்தை அமைத்து தந்தமைக்கு நன்றி செலுத்தும் முகமாக முதலமைச்சருக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்கள்.
0 commentaires :
Post a Comment