தமிழகத்தை ஆட்சிசெய்யப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் சட்டசபைத் தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணி 140 தொகுதிகளைப் பெற்று மீண்டும் வெற்றியீட்டும் எனத் தமிழகத்தின் நக்கீரன் பத்திரிகை நடத்தியகருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் பிரதான எதர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணிக்கு 94 தொகுதிகள் கிடைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதி களுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் நேற்றுமுன்தினம் நள் ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இத்தேர்தல் தொடர்பில் நக்கீரன் பத்திரிகை கடந்த மார்ச் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பின் பெறுபேறுகள் வெளியிடப்பட் டுள்ளன. ஒரு தொகுதிக்கு 400 பேர் என்ற ரீதியில் ஆண்கள், பெண்கள், படித்தவர்கள், பாமரர்கள், அரச ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், இல்லத்தரசிகள் எனப் பல்வேறு தரப்பினர் மத்தியில் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்படுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பின் படி தி.மு.க. கூட்டணிக்கு 140 தொகுதிகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 94 தொகுதிகளும் கிடைக்குமென்றும், 8 தொகுதிகளில் வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்பது கணிக்கமுடியாதிருப்பதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
பெரும்பாலான தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் ஓரிரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதும் இக்கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
தி.மு.க., - அ.தி.மு.க. ஆகிய இரண்டு பெரிய கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளில் ஒரு சில, தங்களுக்குள் கூட்டணி, அமைத்துக் கொண்டு செயல் படுவதால், தேர்தல் முடிவுகள் எப்படி அமையுமோ, தேர்தலுக்கு பின் என்ன நடக்குமோ என, பிரதான கட்சிகள் அரண்டு போயுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. வேட்பாளர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆளாளுக்கு மாய்ந்து, மாய்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எங்கு யாருக்கு வெற்றி என்பதை எளிதில் கணிக்க முடியாத நிலையே, தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நிலவுகிறது.
இருப்பினும், ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு இத்தனை தொகுதிகள் கிடைக்கும் என, மன கணக்கு போட்டு, செயல்பட்டு வருகின்றன.
இதில், பிர தான கட்சிகளான அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரண்டும், தங்களுக்கு பெரும் பான்மை கிடைத்து விடும் என்ற நினைப் பில் உள்ளன. இருந்தாலும், அவற்றுடன் கூட்டணி அமைத்துள்ள சிறிய கட்சிகள், “எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக் காது. அதனால், தேர்தலுக்கு பின் ஆட்சியை முடிவு செய்ய போவது நாம் தான்’ என, கணக்கு போட்டு வருகின்றன.
இதனால், தேர்தலுக்கு பின் எத்தகைய பாணியை மேற்கொள்ள வேண்டும், நமக்கான முக்கியத்துவத்தை எப்படி அதிகரிக்க வேண்டும் என்பது குறித்து, அவை, இப்போதே திட்டம் போட தொடங்கி விட்டன. தி.மு.க., கூட்டணியில், உள்ள பா.ம.க.,- விடுதலை சிறுத்தைகள்- கொ.மு.க., ஆகிய மூன்று கட்சியிலும், முக்கிய நிர்வாகிகள் சிலர், இப்போதே தனிமையில் அடிக்கடி இது தொடர்பாக கூடி பேசி வருகின்றனர்.
“எப்படியும் தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமையும் போது எங்களின் பங்களிப்பு எத்தகையது என்பதை நாங்கள் இப்போதே உறுதி செய்து கொள்ள வேண்டும்’ என, அக் கட்சியினரே கூறுகின்றனர்.
ஏற்கனவே இம்மூன்று கட்சியினரும் தத்தமது தொகுதிகளில், சரியாக ஒத்துழைப்பதில்லை என, தி.மு.க. கூட்டணியில் புலம்பல் சத்தம் சற்று அதிகமாகவே கேட்டு வருகிறது. இந்நிலையில், இம்மூன்று கட்சிகளின் தனிக் கூட்டணியால், தி.மு.க. சற்று கலக்கத்திலேயே உள்ளது. இதே போல், அ.தி.மு.க. கூட்டணியில், இ.கம்யூ., - மா. கம்யூ., கட்சிகள், தங்களுக்குள் தனிக் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன.
இந்த கூட்டணி யில் இடம்பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளும் தேர்தலுக்கு பின் எப்படி செயல்பட வேண்டும் என, இப்போதே தனித்திட்டம் தீட்டி அதை செயல்படுத்த காத்திருக்கின்றனர். “தேர்தலுக்கு பின் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆரவு’ என தெரிவித்து விட்டு, இரண்டு முக்கிய கூட்டணியிலும் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகள், தனி வழி போட்டு வருவதால், பிரதான கட்சிகள் இரண்டும், தேர்தலுக்கு பின் என்ன நிகழுமோ என்று பீதியில் ஆழ்ந்துள்ளன.

கூட்டணிக்குள் கூட்டணி: பிரதான கட்சிகள் அதிருப்தி

0 commentaires :
Post a Comment