4/09/2011

பத்திரிகைகளில் அறிக்கை விடும் தமிழ் அரசியல் வாதிகளுக்கு முதலமைச்சரின் அபிவிருத்திகள் ஓர் முன் உதாரணம்.- பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை

மட்ஃபுதூர் விக்னேஸ்வரா வித்தியாலத்தின் கட்டடத்திறப்பு விழா இன்று (08.04.2011) பாடசாலையின் அதிபர் பெருமாள் மகேந்திரவர்மன் தலமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதி மேஜர் ஜோர்ச்பிள்ளை சிறப்பதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் மேற்படி வித்தியாலயமானது பல கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விசேடமாக பாடசாலைக்கான காணி சுபீகரிக்கப்பட்டமை, அதனால் குறிப்பிட்ட சில வகுப்புக்களிலே மாணவர்கள் அனைவரையும் உள்ளடக்கி கற்பித்தல்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலை இப் பாடசாலைக்கு ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வந்த இப் பாடசாலைகளுக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களின் வருகை ஒரு நம்பிக்கையினை ஏற்படுத்தி இருந்தது. அந்த நம்பிக்கையின் பயன்தான் இன்று திறக்கப்பட்டிருக்கின்ற மாடிக்கட்டடம். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களிடம் நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேற்படி பாடசாலைக் கட்டடத்தை அமைப்பதற்கு நிதி வழங்கி இருந்தார். எனவே கிழக்கு மாகாண முதலமைச்சரின் அர்ப்பணிப்பால் கிடைத்த இக் கட்டிடம் போன்று பல உதவிகள் இப்பாடசாலைக்கு வர இருக்கின்றது. எனவேதான் வெறுமனே உரிமை பற்றி பேசும் தமிழ் அரசியல் வாதிகள் அபிவிருத்தி குறித்து சிந்திக்க வேண்டும். இவ்வாறானவர்களுக்கு முதல்வரின் வேலைத்திட்டங்கள் சான்றாக அமையட்டும்.

0 commentaires :

Post a Comment